பேச்சில் வென்ற பிஞ்சுகள்
தந்தை பெரியாரின் 133ஆம் ஆண்டு பிறந்த நாளை முன்னிட்டு பெரியாரால் வாழ்கிறோம் என்ற தலைப்பில் மாவட்ட அளவில் (32 மாவட்டங்கள்) 05.09.2010 அன்று நடைபெற்ற பேச்சுப் போட்டியின் முதல் சுற்றில் 4712 பேர் கலந்து கொண்டனர். அதில் இறுதிச் சுற்றில் வெற்றி பெற்றோர்:
8ஆம் வகுப்பு வரை: முதல் பரிசு: வெற்றிச் செல்வன், இரண்டாம் பரிசு: இளவரசன்.
12ஆம் வகுப்பு வரை: முதல் பரிசு: சங்கர நாராயணன், இரண்டாம் பரிசு: லெட்சுமி மணிபாலன்
கல்லூரி: முதல் பரிசு: பௌசியா பானு, இரண்டாம் பரிசு: சுபாஷ் சந்திர போஸ்.
வெற்றி பெற்றவர்களுக்கு 4லு லட்சம் ரூபாய் பரிசினை, சென்னை பெரியார் திடலில் ஜனவரி 15,16, 17இல் நடைபெற்ற தமிழ்ப் புத்தாண்டு – பொங்கல் விழா நிகழ்ச்சியில் பெரியார் மணியம்மை பல்கலைக்கழகம் – பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனத்தின் சார்பில் தமிழர் தலைவர் கி.வீரமணி வழங்கிச் சிறப்பித்தார்.
இவர்களுள் வெற்றிச் செல்வன், தான் பெற்ற பரிசுத் தொகை 1 லட்சம் ரூபாயில் 25,000 ரூபாயினை நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு நன்கொடையாக தமிழர் தலைவரிடம் கொடுத்துவிட்டார்.