ஓவியம் வரையலாம், வாங்க! சிங்கம்
நண்பர்களே! இந்த முறை நாம் காட்டுக்கு அரசனான சிங்கத்தை வரைந்து பார்ப்போமா?
சிங்கம் பாலூட்டி வகையைச் சேர்ந்த ஒரு காட்டு விலங்கு. தமிழில் ஆண் சிங்கத்திற்கு ‘அரிமா’ என்ற பெயருண்டு.
குற்றாலக் குறவஞ்சியில் ‘ஆளி’ என்ற சொல் அரிமாவைக் குறிக்கும். ஆண் சிங்கம் சுமார் 150 – 250 கிலோ எடை கொண்டதாக இருக்கும். பூனைக் குடும்பத்தைச் சேர்ந்த விலங்கு ஆகும்.
இவ்விலங்கு இன்று ஆப்பிரிக்காவிலும், இந்தியாவிலும் உள்ள சமவெளிக் காடுகளில் மட்டுமே காணப்படுகிறது.
இதன் கர்ஜனை சுமார் 8 கிலோ மீட்டர் வரை கேட்கும் திறன்கொண்டது. பெரும்பாலும் பெண் சிங்கங்களே வேட்டையாடும்.
இவ்வாறு சிறப்பு பெற்ற சிங்க வகையில் ஆண் சிங்கத்தை நாம் எளிய முறையில் வரைவதற்குத் தேவையான ஆங்கில எழுத்துக்கள் ‘O’, ‘U’ மற்றும் ‘W’. இவற்றை எடுத்துக்கொள்வோம்.
வாங்க ஓவியராகலாம்.