கணக்கும் இனிக்கும் : ரயில் நேரம்
அடிக்கடி இந்த ரயில் நேரத்தைக் கேட்டிருப்போம். ரயில்களில் மட்டுமல்ல, பல இடங்களில் இதன் பயன்பாட்டினைப் பார்க்கலாம். ரயில் நேரம் நான்கு இலக்கங்களைக் கொண்டிருக்கும். முதல் இரண்டு இலக்கங்கள் மணியையும், அடுத்த இரண்டு இலக்கங்கள் நிமிடத்தையும் குறிக்கும். 16:00 என இருக்குமாயின் 16 – மணி : 00 நிமிடம். முதல் இரண்டு இலக்கங்கள் 0-23 வரையிலும், நிமிட இலக்கங்கள் 0-59 வரையிலும் பார்க்கலாம்.
பின்னோக்கிச் செல்வோம்
ஆமாம், அதென்ன ரயில் நேரம்? அதில் என்ன சிறப்பு? ஏறி உட்காருங்க, காலச் சக்கரத்தில் ஏறிப்போய் அந்த வரலாற்றினைப் பார்த்துவிட்டு வந்திடுவோம். பத்தொன்பதாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் இங்கிலாந்தில் ரயில்கள் புழக்கத்திற்கு வருகின்றன. 1840 காலகட்டத்தில் பல நகரங்களில் ரயில் இயங்குகின்றது. பொதுமக்கள் பயன்பாட்டிற்கும், பொருள்களை எடுத்துச்செல்லவும் பயன்படுத்தப்பட்டது. இப்ப நாம என்ன நேரம்னு வெளிநாட்டவர்கள் கேட்டால் 10:00 pm IST எனச் சொல்லுவோம்; சொல்ல வேண்டும். இதில் am, pm நமக்குத் தெரியும். அதாவது, முற்பகல், பிற்பகல். அதென்ன IST? அது Indian Standard Time – இந்திய திட்ட நேரம். இந்தியா முழுக்க ஒரே நேரம்.
இந்த நேரமெல்லாம் 1840 காலகட்டத்தில் இல்லை. பல நகரங்களிலும் வேறு வேறு நேரத்தைப் பின்பற்றினார்கள். பிரிட்டன் ரயில்வேதுறைதான் இந்த ரயில் நேரத்தை அறிமுகப்படுத்தி ரயில்வே நேரம் இதுதான்னு முறைபடுத்த முற்பட்டாங்க. ஆனா அதை யாருமே அவ்வளவு எளிதாக ஒத்துக்கொள்ளவில்லை. இது பயணிகளைவிட ரயில்வே துறைக்கு அவசியம். எந்த நேரத்தில் எந்த ரயில் வருகின்றது என சரியாகத் தெரிந்தால்தான் அதற்கு ஏற்ப சிக்னல் போட இயலும், விபத்துகளைத்தடுக்க முடியும். இப்ப தொழில்நுட்பம் இவ்வளவு வளர்ந்த பின்னரும் விபத்துகள் நடக்கின்றன. இந்தக் காலத்துலேயே இப்படின்னா 1840 காலகட்டத்தை கொஞ்சம் யோசித்துப் பார்க்கவும். இதே காலகட்டத்தில் ரயில்கள் வட அமெரிக்கா, இந்தியாவிற்கு எல்லாம் வருகின்றது.
இந்தியாவில் ரயில் நேரம்
இந்தியாவில் ரயில் நிலையங்களை ஆங்கிலேயர்கள் நிறுவியதற்கான மிக முக்கியக் காரணம், அவர்கள் பயணம் செய்யவும், ஏராளமான வளங்களைத் துறைமுகங்கள் மூலம் தங்கள் நாட்டிற்கு எடுத்துச் செல்லவுமே. இங்கிலாந்து போன்ற சின்ன நாட்டிலேயே ஒரே நேரம் இல்லை என்றால் பரந்துவிரிந்த இந்தியாவில் எவ்வளவு சிக்கல் இருக்கும்? பம்பாயிலிருந்து (மும்பை) கல்கத்தா (கொல்கத்தா) வரை ரயில் சென்றது. இரண்டு இடங்களிலும் வேறு வேறு நேரத்தைக் கொண்டிருந்தது. 1802ஆம் ஆண்டே சென்னை டைம் (Chennai Time) என்று ஒன்றினை ஜான் கோல்டிங்கம் அறிமுகம் செய்திருந்தார். இது கிட்டத்தட்ட இந்தியாவின் மய்யமாக இருந்தது. சென்னை நேரத்தையே இந்தியா முழுவதும் பயன்படுத்த 1884இல் பரிந்துரைத்தனர். எல்லோரும் ஏற்றுக்கொண்டாலும் மும்பையும் கொல்கத்தாவும் முரண்டு பிடித்தன. கடைசியாக 1906இல் அலகாபாத் நேரத்தினை இந்தியா முழுவதும் பயன்படுத்தத் தீர்மானம் நிறைவேறியது. ஆனாலும் மும்பையும் கொல்கத்தாவும் தாமதமாகவே இதில் இணைந்தன.
இப்படித்தான் நாம இந்திய ரயில்வே நேரத்திற்கு வந்தடைந்தோம். இப்ப காலச்சக்கரத்தில் இருந்து இறங்கி கணக்குப் போடலாமா?
கணக்குப் போடுவோமா?
23:30 மணி என்றால் என்ன? நம்ம கடிகாரத்தில் 12 மணி நேரம்தான் இருக்கும். கடிகாரத்தைப் பார்த்து நாம நேரத்தைச் சொல்லிடலாம். ஆனால், முற்பகலா (am) பிற்பகலான்னு (pm) சொல்ல இயலாது. நேரத்திற்குப் பின்னால் இந்த am/pm போடத் தவறிவிட்டால் காலையா மாலையான்னு தெரியாமல் போய்விடும். சிக்கலும் இருக்கும். [இப்படி நேரத்தைப் பற்றி புரியாமல் பலரும் ரயிலையும் விமானத்தையும் கவனக்குறைவால் தவறவிடுவதும் உண்டு. இதனைப் புரிந்துகொண்டால் அம்மாதிரியான இக்கட்டுகளைத் தவிர்க்கலாம்.] மீண்டும் 23:30 மணிக்கு வருவோம். 12க்கு மேல் இருந்தா அது pm (பிற்பகல்), அந்த நேரத்தைக் கணக்கிட 23:30இல் இருந்து 12அய்க் கழித்தால் 11:30 கிடைக்கும். வெறும் 11:30 எனச் சொன்னால் குழப்பம் நேரிடும். 11:30 ஜீனீ என்று குறிப்பிட வேண்டும். இரயில் நேரம் 12க்குக் குறைவாக இருந்தால் அது ணீனீ (முற்பகல்).
14:30 Railway Time à 2:30 pm
06:0 Railway Time à 6:30 am
23:59 Railway Time à 11:59 pm