துணுக்குச் சீட்டு – 12 : தூக்கம் முக்கியம் பாஸ்
மார்கழி மாதம் வெடவெடக்கும் குளிரில், இதமாய் சுடு தண்ணியில குளிச்சிட்டு வந்த ஒரு அரைமணி நேரத்தில ஒரு தூக்கம் வருமே… அப்படி வரும் தூக்கத்தோட, பள்ளிப் பேருந்துல ஏறி உடனே தூங்கும் மக்கள் எல்லாம் கை தூக்குங்க! இதுவே குளிர்ந்த தண்ணியில குளிச்சா தூக்கம் வரமாட்டேங்கிறதே, ஏன்?
நம்ம உடலுக்குனு ஒரு நிலையான வெப்பநிலை இருக்கு. ஆனால், இது நாள் முழுவதும் மாறிக்கிட்டே இருக்கும். பகல் நேரத்துல அதிகமா இருக்குற உடல் வெப்ப நிலை, இரவு நேரத்தில குறைஞ்சா தான் நல்ல உறக்கம் வரும். அப்படி வெப்பநிலை குறைய சுடுதண்ணீர் குளியல் உதவுது. அதான் எப்படி?? சுடுதண்ணீர்ல குளிக்கும் போது, நம்மளோட ரத்தம் கால் பாதம் மற்றும் கை விரல்களுக்குப் பாயும், அப்படிப் பாயும் போது உடலின் உட்புறம் (core) இருக்கும் வெப்பம், கை விரல்கள் மற்றும் பாதத்தை நோக்கிச் செல்லும். நம்ம பாதமும் கை விரல்களும், வெப்பத்தை… வெளித்தள்ளி விலகச் (radiate) செய்யும். இதனால உடம்பின் வெப்பநிலை சுமார் 2-3முதி வரை குறையும், அதோட, ரத்தக்கொதிப்பும் குறையும். நமக்கும் நல்லா தூக்கம் வரும். ஆனா, குளிர்ந்த தண்ணியில குளிக்கும் போது, horepinephrine மற்றும் cortisol நம்ம உடம்புல சுரக்குது. இந்த horepinephrine உடல் வெப்பத்தை அதிகரிக்கும். அதனால் நம்ம உடல் விழிப்பு நிலைக்கு (Awake state) வந்துவிடும். அதனாலதான், தூக்கம் வர மாட்டேன்ங்குது. இனிமே, இரவில சுடுதண்ணீர் குளியல் எடுத்து, அருமையா தூங்கலாம்.
அப்படீன்னா, எப்போ மற்ற வேலைகளைச் செய்யறது? ஒன்னு சொல்லவா, 6-8 மணி நேர உறக்கம் இருந்தா தான் நம்ம உடல் நல்லா வேலை செய்யும், படிச்சதெல்லாம் மனசுல நிக்கும், மறுநாள் ஓடி ஆடி விளையாட உடம்பு ஒத்துழைக்கும். அதனால, உடல் ஆரோக்கியத்தோட இருக்கணும்னா அளவான தூக்கமும் முக்கியம் பிஞ்சுகளே!