சுத்தமே சுகமாகும்
சுத்தம் என்றும் சுகமாகும்
சோம்பல் நமக்குப் பகையாகும்!
நாட்டில் தூய்மை காத்திட்டால்
நாளும் நலமாய் வாழ்ந்திடலாம்!
வீட்டில் சுத்தம் காத்திட்டால்
விலகும் நோய்கள் வெகுதூரம்!
தண்ணீர் தேங்கி நின்றாலே
தானாய்ப் பெருகும் கொசுக்கூட்டம்!
கொசுக்கள் இல்லா இடந்தனிலே
கொடிய நோய்கள் தொற்றாதே!
தூய்மை நாளும் பேணுவதால்
தொடரும் நன்மை ஆயிரமே!
நித்தம் சுத்தம் காத்திட்டால்
நீண்ட காலம் வாழ்ந்திடலாம்!
மனதைத் தூய்மை ஆக்கிட்டால்
மனித நேயம் மலர்ந்திடுமே!
– ஆ.ச. மாரியப்பன்,
புதுக்கோட்டை