வருக வருக புத்தாண்டே!
வருக வருக புத்தாண்டே
வளமிகு தையில் புத்தாண்டே!
தருக தருக புத்தாண்டே
தரணியில் இன்பம் புத்தாண்டே!
கல்விக் கலைகள் புத்தாண்டே
கணக்கின்றிப் பெருகப் புத்தாண்டே!
ஒல்லும் வகையில் புத்தாண்டே
உயர்வுறச் செய்க புத்தாண்டே!
நல்லவை நடக்க புத்தாண்டே
நீயும் வருவாய் புத்தாண்டே!
அல்லவை மறைய புத்தாண்டே
அறநெறி தருவாய் புத்தாண்டே!
இன்று போல புத்தாண்டே
இனிமை பொங்கப் புத்தாண்டே
என்றும் வருவாய் புத்தாண்டே!
இன்பம் தருவாய் புத்தாண்டே!
– கவிஞர் பா. தமிழ்வேலி, வேலூர்.
(பிஞ்சுகளே… புத்தாண்டு எதுவும் தானாகத் தராது. புதுப் பாதை தொடங்கவும், நம்மை செம்மைப்படுத்திக் கொள்ளவும் உறுதியேற்றாவது நாம் செயல்படுத்தத் தொடங்க வேண்டும் என்பதற்கு ஓர் அடையாளக் குறிப்பு நாளே புத்தாண்டு ஆகும்.)