விடுகதைகள்
1. கறுப்பாய் இருந்தவன் கரை சேர்ந்த போது அடடா இதென்ன பளபளப்பு. அது என்ன?
2. கானம் இனிப்பு அவனோ கறுப்பு. அவன் யார்?
3. வல்லவனுக்கு வாலிலும் ஆயுதம். அவன் யார்?
4. நன்றிக்கு வால், வால் அடிப்பட்டால் வள்வள். அது என்ன?
5. திடீரென்று வந்த தீவெட்டி வெளிச்சம் அப்புறம் தொடர்ந்தது கடா புடா சத்தம். அது என்ன?
6. ஒருவரை மற்றவர் துரத்தி துரத்தி காலம் காட்டினார்கள். அவர்கள் யார்?
7. சட்டையில்லாமலே பை வைத்தவன் தாவுவதில் கெட்டிக்காரன். அவன் யார்?
8. மேலிருந்தும் வருவான் கீழிருந்தும் வருவான். அவன் யார்?
9. கல்லை சுமந்தவன் கறிக்கு ருசியானவன். அவன் யார்?-
10. கட்டை போலிருந்தவனை வெட்டிப் பிழிந்தால் ருசியோ ருசி. அது என்ன?
– விடைக்கு இங்கு கிளிக் செய்யவும்