துணுக்குச் சீட்டு – 15
சூரியன் நம்மள ஸ்ட்ரா போட்டு உறிஞ்சு நம்மளோட சக்தி எல்லாம் எடுத்துக்கிற மாதிரி கொசுவும் ஸ்ட்ரா போட்டு நம்மளுடைய ரத்தத்தை எல்லாம் குடிச்சிடுது. கொசுவை பட்டுனு அடிச்சா உடனே இறந்து போயிடும். ஆனா நமக்கு வலி தெரிவதற்கு முன்னாடியே அதுக்கு தேவையான அளவு ரத்தத்தை குடிச்சிடுமாம். எப்படி?
நம்மள கடிக்கிற கொசுக்கள் எல்லாமே பெண் கொசுக்கள் மட்டும் தான். ஆண் கொசுக்கள் மனிதர்களை கடிக்காது. கொசு மனிதர்கள் மேலிருந்து வரும் வாசனையையும் நம்ம வெளியிடும் கார்பன் டை ஆக்சைடை வைத்தும் தான் கண்டுபிடிக்கிறது. அதுபோலவே வியர்வை மணத்தை வச்சும் மனிதர்களைக் கொசு கண்டுபிடிக்கிறது. இந்தப் பெண் கொசுக்கள் மனிதர்கள் மேல வந்து உட்கார்ந்து உடனே அதனுடைய எச்சிலை நம்ம மேல துப்பும். அப்படி துப்பும்போது அந்த இடம் நமக்கு மரத்து போய்விடும். இந்த மரத்துப்போன இடத்துல அதோட வாயில் இருக்கும் ஆறு ஊசிகள் வச்சு நம்ம உடம்புக்குள்ள குத்தும். வெளிப்புறம் இருக்கிற இரண்டு ஊசிகள் Mandibles எனப்படும். இது நம்மளோட தோலை கிழிக்க பயன்படுது. அதுக்கு அடுத்து உள்புறமாக இருக்குற இரண்டு ஊசிகள் Mandibles எனப்படுது.
இது கிழிக்கப்பட்ட தோலையும்ம் சதையையும் இரத்தகுழாயையும் விரித்து வைத்திருக்கப் பயன்படுது. அதுக்கு அடுத்து இருக்கும் Hypopharynx என்ற ஊசி மூலமா ரத்த குழாய்க்குள்ள கொசு, அதோட எச்சிலை உமிழும். இந்த எச்சில் நம்மளுடைய ரத்தம் கட்டிக்காம இருக்கிறதுக்கும் ரத்தக்குழாய் மூடிடாம இருக்கிறதுக்கும் பயன்படுது. நடுவுல Labrum எனும் ஊசி இருக்கு. இந்த ஊசி மூலமாக தான் கொசு ரத்தத்தை உறிஞ்சி எடுத்துக்கும். மொத்தமா ஒரு கொசுவுக்குத் தேவையான ரத்தத்தை உறிஞ்சி எடுக்க 1.5 நிமிஷம் தேவைப்படும். இது முழுசா ரத்தத்தை உறிஞ்சி எடுத்து அப்புறம்தான் நாம் கொசு கடிச்சதையே உணருவோம்.
அது ஏன் பெண் கொசுக்கள் மட்டும் ரத்தத்தை குடிக்குது? கொசு அதோட முட்டைக்குத் தேவையான புரதச் சத்து நம்மளோட ரத்தத்தில் தான் இருக்கு. அதனால தான் பெண் கொசுக்கள் மட்டும் ரத்தத்தை உறிஞ்சி எடுக்குது. நம்மளோட ரத்தக் குழாய்க்குள்ள உமிழப்பட்ட எச்சில் மூலமா பல்வேறு நோய்கள் நமக்கு வரும் ஏன்னா அந்த எச்சிலில்தான் நோய் பரப்பும் கிருமிகள் தங்கியிருக்கும்.
இன்னொன்னு சொல்லவா நம்ம உடம்புல எந்த இடத்துல கொசு கடிச்சாலும் அதுல மூலமா வர கிருமி நம்மளுடைய கல்லீரலைப் போய் சேருவதற்கு 20 நிமிஷம் தான் ஆகுமாம்.
கொசு அதோட எடையை விட இரண்டுல இருந்து மூணு மடங்கு அதிகமான எடை வர அளவுக்கு ரத்தத்தை உறிஞ்சின அப்புறம் தான் நமக்குக் கொசு கடிச்சிருக்குன்னு உணர ஆரம்பிப்போம். அதுக்குள்ள அது பறந்து, பாடிகிட்டே போயிடும். அல்லது அடிப்பட்டுச் செத்துப்போகும். ஆனா, நம்ம ரத்தமும் போச்சு. அது கொண்டுவரும் கிருமிகளும் நம்ம ரத்தத்துக்குள்ள சேர்ந்தாச்சு.