ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதம், ஒவ்வொரு சுவை
சிறார் எழுத்தாளர் விழியன் எழுதி, பெரியார் பிஞ்சு வெளியிட்டிருக்கும் நூல்? மொத்தம் பத்து கதைகள். ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதம், ஒவ்வொரு சுவை. அய்ந்து வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு என்று வெளியிட்டு இருக்கிறார்கள். அனைத்து வயதினராலும் படித்து ரசிக்க முடிகிறது. முதல் கதை வழியாக எப்போதும் தொலைக்காட்சியையே பார்த்துக் கொண்டிருந்ததால் என்ன ஆகும் என்று குழந்தைகள் புரிந்து கொள்ளும். மலைக்க வைக்கும் கற்பனைக் குதிரையைத் தட்டிவிடும். இரண்டாம் கதையைப் படித்தால் தன்னை அறியாமலே மரம் வளர்ப்பில் ஈடுபடும் முனைப்பு குழந்தைகளுக்கு வரும். இப்படி பெரியார் பிஞ்சு இதழில் சிரிக்க, சிந்திக்க, விளையாட, செய்து பார்க்க மற்றும் கற்பனை வளம் சொட்டும் கதைகள் என ஏராளம் உண்டு. குழந்தைகளுக்கு நூல் வாங்கித் தர எண்ணம் இருந்தால் குறித்து வைத்துக் கொள்ளுங்கள்.