நான் செய்த கப்பல்
காகி தத்தில் அழகிய
கப்பல் ஒன்று செய்தேன்!
கடலில் இதனை ஓட்டவோ
ஆற்றில் மிதக்கச் செய்யவோ
குளத்தில் விட்டுப் பார்க்கவோ
குட்டை நீரில் செலுத்தவோ
அடுக்கு மாடி வீட்டிலே
அப்படி எல்லாம் முடியுமோ?
முயன்று செய்த கப்பலை
மூலையில் போட்டு விடுவதோ?
முயற்சி செய்ததில் கண்டபயன்
வீணாய்ப் போகச் செய்வதோ?
மீன்கள் வளரும் தொட்டியிலே
மிதக்க விட்டுப் பார்ப்பேனே
காகிதக் கப்பல் அசையுமே
கண்டு மகிழ்ந்திடு வேனே!
– முனைவர் முரசு நெடுமாறன்