பரிணாமம் – கற்கருவிகளைப் பயன்படுத்தும் காப்பசீன் குரங்குகள்!
பரிணாமப் பாதையில் இன்னொரு மனித இனம்?
குரங்கிலிருந்து மனிதன் பரிணமித்தான் என்றால், இப்போது ஏன் அது நிகழ்வதில்லை?” அறிவியல் பற்றிய பேசும் போது இந்தக் கேள்வியைச் சில நேரம் எதிர் கொண்டிருப்பீர்களே! இப்படி ஒரு கேள்வி பரிணாம மறுப்பாளர்களால் தொடர்ந்து முன்வைக்கப்படுகிறது.
மனிதன் உள்ளிட்ட ஒவ்வொரு குரங்கினமும், பிற எல்லா உயிரினங்களும் பரிணாமம் அடைந்து கொண்டு தான் இருக்கின்றன. அந்தப் பரிணாமம் என்பது மனித நிலையை எட்டுவதாகவும் இருக்கலாம்; அல்லது அந்த நிலையை எட்டாத வளர்ச்சியாகவும் இருக்கலாம். மாறி வரும் சூழலுக்கேற்ப தகவமைப்புத் திறன்களை வளர்த்துக் கொள்வது என்ற அடிப்படையில் எல்லா உயிர்களும் பரிணாமம் அடைந்து கொண்டு தான் இருக்கின்றன.
இந்தப் பரிணாம வளர்ச்சிப் போக்கில் மனித நிலை நோக்கிய வளர்ச்சியின் முதல் படியினை ஒரு பகுதி குரங்கினங்கள் எட்டியிருக்கின்றன என்பதை ஆராய்ச்சியாளர்கள் கவனித்திருக்கிறார்கள். பல லட்ச ஆண்டுகளுக்கு முந்தைய, நமது கற்கால மூதாதைகளின் நிலைக்கு சில குரங்குகள் வந்திருக்கின்றன.
பல லட்சம் ஆண்டுகளுக்கு முன் சில குரங்குகள் (நமது மூதாதை தான்) நிமிர ஆரம்பித்த பின், முன்னங்கால்கள் இரண்டையும் கைகளாகப் பயன்படுத்த ஆரம்பித்தன. அந்தக் கைகளால் கற்களையும், பெரிய எலும்புத் துண்டுகளையும் கருவிகளாகப் பயன்படுத்த ஆரம்பித்த கட்டம், அதுவரை இல்லாத ஒரு பெரும் மாற்றம் பூமியில் தொடங்கியது. கற்களை கருவிகளாகப் பிடித்து உபயோகிக்க ஆரம்பித்த அந்தக் கைகள் தான் இப்போது கணினிகளையும், ஸ்மார்ட் ஃபோன்களையும், James web தொலைநோக்கியையும் இயக்கிக் கொண்டிருக்கின்றன! கருவிகளைப் பயன் படுத்திய, கைகளைக் கட்டுப்படுத்திய மூளை அபார வளர்ச்சியை நோக்கி நகர்ந்ததன் விளைவுகள் இவை.
மனித இனம் கடந்து வந்த பாதையில் மீண்டும் காப்பசீன் வகைக் குரங்குகள் கைகளில் கருவிகளேந்தியுள்ளதை அறிவியல் ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளார். தென் அமெரிக்காவை.
கடின ஓடுகள் கொண்ட விதைகளை உடைக்க கற்களை கச்சிதமாகப் பயன்படுத்துகின்றன இக்குரங்குகள். அவற்றின் பிள்ளைகள் இந்த உத்திகளை கூர்மையாகக் கவனிக்கவும் செய்கின்றன. அடுத்த கட்ட பரிணாமத்தை நோக்கிய ஆரம்பக் கோடுகளை வரைய ஆரம்பித்திருக்கின்றன இக்குரங்குகள்.
இக்குரங்குகள் 3000 ஆண்டுகள் கற்களைக் கருவிகளாகப் பயன்படுத்தியுள்ளன. என்பதற்கு தொல்லியல் ஆதாரங்களும் கிடைத்துள்ளன என்கிறார் லண்டன் பல்கலைக் கழகக் கல்லூரியில் தொல்லியலாளர் தாமஸ் ப்ராவிட். இதற்கு முன்பு 4300 ஆண்டுகளுக்கு முந்தைய இத்தகைய சான்று ஆப்பிரிக்காவில் கிடைத்துள்ளது
இவை மனித நிலைக்குப் பரிணாம வளர்ச்சி அடையுமா? நிகழலாம், நிகழாமலும் போகலாம். அல்லது இன்னும் சில லட்சம் ஆண்டுகளில் நம்மை விட மேம்பட்ட உயிரின ஒன்று தோன்றலாய். ஆனால், பரிணாமம் குறித்து மற்றுமொரு சான்றையும் அளித்திருக்கின்றன இக்குரங்குகள்.