சிறுவர் பாடல் – குரங்குக் கூட்டம்
நீண்ட வால்கு ரங்குகள்
கூட்ட மாக வருகுது
மரக் கிளையை ஆட்டி ஆட்டி
அடுத்த மரம் தாவுது.
பார்க்கும் போது முறைக்குது
பழம் கொடுத்தால் வாங்குது
வாலைக் கிளையில் சுற்றியே
தலை கீழாகத் தொங்குது.
‘விறு விறு’ன்னு ஏறுது
சுற்றிச் சுற்றிப் பார்க்குது
பறித்தகாயைக் கடித்துக் கடித்துத்
துப்பித் துப்பி வைக்குது.
குட்டிக் குரங்கைச் சுமந்தபடி
மகிழ்ச்சியோடு நடக்குது
மரங்களிலே வாழுது
கிடைக்கும் உணவைப் புசிக்குது.
இரண்டு மூளை கொண்ட குரங்கு
நீண்ட வாலை அசைக்குது
பார்க்கும் போதே மயக்குது
பார்க்கப் பார்க்க இனிக்குது.
– விண்மீன்