ஓவியம் வரையலாம், வாங்க!: மயில்
வணக்கம் பிஞ்சுகளே!
இந்தியாவிலுள்ள பறவைகளில் மிகவும் அழகானது மயில்! இதனால்தான் இந்தியாவின் தேசியப் பறவை மயில் என்று 1963ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்டது. இந்தியாவில் மயில்கள் நீண்ட காலமாக வாழ்ந்து வருகின்றன. அரசர்கள் காலத்தில் பொன் நகைக்குச் சமமாக மயிலை மதித்தனர். சாலமோன் மன்னனுக்கு இந்திய மன்னர்கள் மயிலை அன்பளிப்பாக வழங்கியுள்ளனர். மாவீரன் அலெக்சாண்டர் இந்தியாவிலிருந்து கிரேக்க நாட்டிற்கு மயிலைக் கொண்டு சென்றுள்ளார். இதன் மூலம் மயில் ரோம் உள்ளிட்ட பல நாடுகளுக்கும் பரவியுள்ளது.
இத்தகைய சிறப்புப் பெற்ற மயிலைத்தான் ஆங்கில எழுத்துகள் உதவியுடன் வரைந்து வண்ணம் தீட்டி மகிழப் போகிறோம். இதற்குத் தேவையான ஆங்கில எழுத்துகள் V, C, U, W
வாங்க, வரையலாம்!
‘V’ எழுத்தை படுக்கை வசமாக எழுதவும்.
‘V’ எழுத்தைத் தொட்டவாறு ‘C’ எழுத்தை எழுதவும்.
‘C’ ன் மேற்பகுதியிலிருந்து கேள்விக்குறி படத்தில் காட்டியபடி எழுதவும்.
கேள்விக்குறியின் அடியில் வலது புறத்தில் நீள்வட்டம் வரைந்து கொள்ளவும்.
நீள் வட்டத்தின் அடிப்பகுதியில் ‘U’ எழுத்தை படத்தில் காட்டியபடி சற்று உயரமாக எழுதவும்.
‘C’ எழுத்தின் அடிப்பகுதியில் இருந்து வளைவுக் கோட்டின் உதவியுடன் ‘C’ மற்றும் ‘U’ எழுத்துடன் படத்தில் காட்டியபடி இணைக்கவும்.
வளைவுக் கோட்டின் அடிப்பகுதியில் ‘W’ எழுத்தை படத்தில் காட்டியபடி எழுதவும்.
இப்பொழுது மயிலின் கொண்டை, கண், கால்கள் மற்றும் தோகையின் உட்பகுதியில் படத்தில் காட்டியபடி வரைந்து கொள்ளவும்.
இபோது வண்ணந்தீட்டி மகிழுங்கள்.