திருக்குறள் பொருள் – அரசியல்
அதிகாரம் 40 – குறள் எண்: 396
தொட்டனைத்து ஊறும் மணற்கேணி மாந்தர்க்குக்
கற்றனைத்து ஊறும் அறிவு.
ஆற்று மணலில் தோண்டப்படும் கிணற்றில், தோண்டுகின்ற அளவிற்கு மட்டுமேதான் நீர்ச்சுரக்கும். அதுபோல, மக்களுக்கு அவர்கள் கற்கும் கல்வியின் அளவிற்கு மட்டுமேதான் அறிவு வளர்ச்சி பெறும்.
உரை:
டாக்டர் நாவலர்
இரா.நெடுஞ்செழியன் எம்.ஏ., டிலிட்