ஓவியம் வரையலாம், வாங்க! தண்ணீர்க் குவளை
நண்பர்களே, நீங்கள் பார்த்துக் கொண்டிருக்கும் இந்த நீர்க்குவளை ஓவியத்தை ஆங்கில எழுத்துகள் உதவியுடன் மிக எளிதாக வரையலாம் வாங்க!
இதற்குத் தேவையான ஆங்கில எழுத்துகள் A, C, O, D, L மற்றும் V.
படத்தில் காட்டியபடி ‘A’ எழுத்தின் நடுவில் போடும் படுக்கைக் கோட்டை சற்றே வளைவாக எழுதவும்.
‘A’ எழுத்தின் உட்பகுதியில் உள்ள வளைவுக் கோட்டின் மேலே ‘C’ எழுத்தைத் தலைகீழாக, படத்தில் காட்டியபடி எழுதவும்.
‘C’ எழுத்தின் மேற்பகுதியில் ‘O’ எழுத்தை சிறிதாக எழுதிய பின்னர் படத்தில் காட்டியபடி தேவையற்ற கோடுகளை அழிக்கவும். அதனைத் தொடர்ந்து ‘A’இன் அடிப்பகுதியைப் படுக்கைக் கோடு கொண்டு இணைக்கவும்.
‘A’இன் அடிப்பகுதியில் இடம் மற்றும் வலப் புறத்தில் படத்தில் காட்டியபடி D எழுத்தைச்
சற்று சாய்வாக இடவல மாற்றமாக எழுதவும்.
தேவையற்ற கோடுகளை அழித்த பிறகு, ‘A’இன் வலது புறத்தில் படத்தில் காட்டியபடி ‘L’ எழுத்தைத் தலைகீழாக எழுதவும்.
‘L’ எழுத்திற்கு இணையாக மற்றொரு ‘L’ எழுத்தை எழுதி படத்தில் காட்டியபடி இணைத்து விடவும். பின்னர் ‘A’இன் இடப்புறத்தில் ‘V’ எழுத்தைப்
படுக்கை வசமாக எழுதவும். இப்பொழுது உங்களுக்கு நீர்க் குவளை வடிவம் கிடைத்திருக்கும்.
இப்பொழுது நீர்க் குவளையில் உங்களுக்குப் பிடித்த ‘டிசைன்’ செய்து கொண்டால் மிக அழகான நீர்க் குவளை கிடைக்கும்.
வண்ணம் தீட்டி மகிழவும்.