துணுக்குச் சீட்டு – 23: இரவு 11 மணிக்கு மேல டைம் மாத்தக் கூடாது,தெரியுமா?
டி க் டிக் டிக்”
இது,
கைக்கடிகாரத்தோட
இசை மழையோ?
அச்சோ,
கவிதையாகிடக் கூடாதே! சரி, வாங்க நாம எப்பவும் போல, அறிவியலைப் பற்றிப் பேசலாம். என்னம்மா நீ, திடீர் என்று ‘டிக் டிக்’ என ஆரம்பிச்ச, இப்போ, அறிவியல் என்று பேசுற?
ஆமா, அறிவியல் தான். இந்த மாதத்தோட கேள்வி என்ன என்றால், எப்படி, கடிகாரத்துல முள் சரியா, நொடிக்கு நொடிக்கு சரியா மாறுது?
Analog கடிகாரத்துக்குள்ளே battery, quartz crystal இருக்கும். இந்த quartz crystal ஒரு விநோதமான பொருள்! ஆமாங்க. இப்போ, நீங்க ஓர் ஊஞ்சலில் உட்காந்துகிட்டு இருக்கீங்க, உங்க நண்பர், உங்க ஊஞ்சலை ஆடிவிட்டா, வேகமா, இப்படியும் அப்படியும் போவீங்க அல்லவா, அப்படித் தான் இந்த crystal மேல மின்சாரத்தைப் பாய்ச்சினா, அது, ஆட ஆரம்பிச்சிடும். இது மட்டுமில்லை, இந்த crystal இன்னொரு வேலையும் பண்ணும். அந்த crystal மேல ஏதாச்சும் அழுத்தம் குடுத்தா, அது, உடனே அந்த அழுத்தை மின்சாரமா மாற்றும். இப்படி விநோதமா இருக்கும் crystal தான் ……piezoelectric material என்று அழைக்கப்படுகிறது.
மறுபடியும் ஊஞ்சல் கதைக்கு வருவோம். ஊஞ்சலில் உட்கார்ந்துட்டு இருக்கும் உங்களை, உங்களோட தோழர், ஒரு தடவை ஆட்டிவிட்றாங்க… அந்த ஊஞ்சல், எத்தனை தடவை ஊசலாடுதுன்னு உங்களோட இன்னொரு நண்பர் கணக்கு எடுத்துக்கிட்டு இருக்காங்க. அப்போ, உங்க ஊஞ்சல் சுமார் 32761 தடவை ஆடுதுன்னு வச்சிப்போம். அப்படி 32761 தடவை ஊஞ்சல் ஆடுச்சுன்னா, உடனே அங்க இருக்குற ஒரு கூழாங்கல்லைத் தூக்கி ஒரு பையில் போடுவாங்க. இதெலாம் எதுக்குச் செய்யுறாங்க? சும்மா, பொழுது போகலேன்னு தான்!
இதே செயல்முறை தான், கடிகாரத்துக் குள்ளயும் நடக்குது.
Crystal மேல மின்சாரம் பாய்ச்சும்போது, அது ஊசலாட ஆரம்பிக்கும். 32761 தடவை ஊசலாடுதான்னு ஒரு circuit கணக்கு எடுக்கும். Crystal 32761 ஊசலாடியதும், அந்த circuit, ஒரு குட்டி மின் அலைத் துடிப்பை (electric pulse) உருவாக்கும். அந்த அலைத் துடிப்பு, கடிகாரத்துக்குள இருக்கும் ஒரு சின்ன மோட்டாரை இயங்க வச்சி, “ஹே, உன்கிட்ட இணைக்கப் பட்டு இருக்குற நொடி முள்ளை நகர்த்துப்பா.” என்று சொல்லும். இப்படி தான், ஒரு நொடிக்கு ஒரு தடவை, நொடி முள் நகருது.
சரி இன்னொரு சேதி தெரியுமா? இரவு 10 மணிக்குமேல, விடியற்காலை 3 மணிக்குள்ளே கடிகாரத்துல தேதியை மாற்றக் கூடாது. இது என்னப்பா, தேதியை மாற்றி வைக்குறதுக்கூட ஒரு குற்றமா? இது பெரிய குற்றம் எல்லாம் இல்லை… சில சமயத்துல, கடிகாரம் ஒழுங்கா வேலை செய்யாமல் போக வாய்ப்பு இருக்கு, அவ்வளவு தான்.
சரி, ஏன் தேதியை மாற்றக்கூடாது? அதைப் பற்றிப் பேசவே இல்லையே! சில கடிகாரங்கள் நேரத்தோட சேர்த்து தேதியும் காட்டும். தேதி, சரியாக இரவு 12 மணிக்கு மாறுமா? அதான் இல்லை. சுமார் 2-3 மணிநேரத்துக்கு முன்னாடி இருந்தே தேதி மாறுவதுக்குத் தேவையான வேலைகளைக் கடிகாரம் செய்ய ஆரம்பிச்சிடும். இந்தச் சமயத்துல, அதுவே தேதியை மாற்றிக்கொண்டு இருக்கும். அந்த நேரத்துல, நாம தேதியை மாற்றி வச்சா, அது கொழம்பிப் போக வாய்ப்பு இருக்கு. அதுனால தான், இரவு 10 மணிக்கு மேல 3 மணிக்குள்ளே தேதியை மாற்றக் கூடாது. ஓ.கே!
ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி எடுத்த ஒளிப்படம் தான் இது. இது இந்த நிமிஷம், இதே மாதிரிதான் இருக்குமா? அல்லது வேற மாதிரி இருக்குமா? யோசிச்சிட்டே இருங்க, அடுத்த மாதம், இதைப் பற்றிப் பார்ப்போம்.. டாட்டா!