கோள்களின் அணிவரிசை காண்ப்பீர்
22/01/2025 அன்று, சுமார் 100 மீட்டர் வரை மக்கள் வரிசையாக நின்றிந்தனர், பெரியார் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மையத்தில்! தூரத்தில் சில தொலைநோக்கிகள் முலம், வானில் ஏதோ பார்த்துக் கொண்டிருந்தார்கள். 8 கோள்கள் கொண்ட சூரியக் குடும்பத்தில், கோள்கள், சூரியனைச் சுற்றி வரும் போது, ஒரு சமயம், எல்லா கோள்களும் ஒரே நேர்கோட்டில் வரும். இதைக் கோள்களின் அணிவகுப்பு (Planet Parade) என்று கூறுகிறார்கள். 2025-ஆம் ஆண்டு, ஜனவரி மாதத்தின் கடைசி வாரத்தில், உலகில் உள்ள அனைவராலும் இதைப் பார்க்க முடிந்தது. உலகில் உள்ள அனைவராலும் வெற்றுக் கண்களாலும் இவற்றைப் பார்க்கமுடியும் என்றாலும், கொஞ்சம் அருகில் இதை தொலைநோக்கி மூலம் பார்பதற்கே, அத்தனை மக்களும் வந்து இருந்தனர்.
பெரியார் பிஞ்சு மாத இதழின் சார்பாக, தமிழ்நாடு அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மையத்தின் செயல் இயக்குனர், திரு. லெனின் தமிழ்கோவனிடம் பேசினோம். 8 கோள்கள் கொண்ட சூரிய குடும்பத்தில், பூமியில் இருந்து வெறும் கண்களால், செவ்வாய், வியாழன், வெள்ளி மற்றும் சனியை மொட்டை மாடியில் இருந்து பார்த்தாலே நன்றாக தெரியும். அப்படி, மேற்கூறிய நான்கு கோள்களோடு சேர்ந்து Neptune மற்றும் Uranus ஆகிய கோள்களை, சக்திவாய்ந்த தொலைநோக்கிகள் மூலம் பார்க்க முடியும் என்றும், தொலைநோக்கிகள் மூலம் பார்க்க மக்களின் ஆர்வம் அதிகமாக இருப்பதாகவும் கூறினார்.
அவரைத்தொடர்ந்து, தொலைநோக்கியில் கோள்களைப் பார்த்து விட்டு சென்ற பிஞ்சுகள் சிலரிடம் பேசினோம். கோள்களை தொலைநோக்கி மூலம் பார்க்கும்போது, மகிழ்ச்சியாகவும் இருந்ததாக கூறினார்கள்.
ஒவ்வொரு மாதத்தின் இரண்டாம் சனிக்கிழமை அன்று, சென்னையில் உள்ள பெரியார் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மையத்தில் தொலைநோக்கி மூலம் நிலா, நட்சத்திரம் மற்றும் கோள்களைப் பார்க்கும் வண்ணம் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்படுகிறது. அதனோடு சேர்ந்து, சூரிய கிரகணம் போன்று வானில் நடக்கும் நிகழ்வுகள் அன்றும், இந்த நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. வாய்ப்பு கிடைப்போர், கண்டு களிக்கவும்! சிறிய வகை தொலைநோக்கிகள் கொண்டு நீங்களே
வீட்டிலிருந்தும் பார்க்கலாம்!