திருக்குறள்: அரசியல் – பொருட்பால்

அதிகாரம் 63 – குறள் எண்: 625
“அடுக்கி வரினும் அழிவிலான் உற்ற
இடுக்கண் இடுக்கண் படும்.”
ஒன்றன்மேல் ஒன்றாக அடுக்கிய வகையில் துன்பங்கள் பல நேர்ந்த போதிலும், அவற்றைக் கண்டு மனங்கலங்காதவனை, அடையக்கூடிய துன்பம், தானே துன்பப்பட்டு மறைந்தொழிந்துவிடும்.
உரை:
டாக்டர் நாவலர்
இரா.நெடுஞ்செழியன்
எம்.ஏ., டி.லிட்.