இரு சக்கர மகிழுந்து
வாகனப்பெருக்கம்,போக்குவரத்து நெரிசல்,சுற்றுச்சூழல் கேடு இவை இன்றைக்கு மட்டுமல்ல நாளைக்கும் இது உலகப்பிரச்சினைதான்.
பெருகிவரும் நகரப்போக்குவரத்தை எளிதாக்க அமெரிக்காவின் கலிபோர்னியாவில் உள்ள லிட் என்ற மோட்டார் நிறுவனம் இரு சக்கர மகிழுந்தை உருவாக்கிவிட்டது.
சி-1 என்று பெயரிடப்பட்டுள்ள இந்த மகிழுந்து தற்போதுள்ள மோட்டார் பைக் அளவிலேயே இருக்கும்.இரண்டு பேர் பயணம் செய்யலாம். மின்கலத்தால் இயங்கும் இந்த மகிழுந்து மணிக்கு193 கி.மீ வேகம் செல்லக்கூடியது.
இந்த மகிழுந்தில் உள்ள மின்கலத்தில்ஒரு முறை முழுமையாக மின்சாரத்தைச் சேமித்தால் 321 கி.மீ. தொலைவு வரை செல்லலாம்.
குறுக்குவாக்கில் ஆட்டோ வாகனத்தின் அளவில் பாதி அளவே இருக்கும். எளிதாக சாலைகளில் நிறுத்திக்கொள்ளலாம்.
பிற வாகனங்கள் இந்த இருசக்கர மகிழுந்தில் பக்கவாட்டில் வந்து இடித்தாலும் கீழே விழாத வகையில் புதிய தொழில் நுட்பத்தில் இந்த மகிழுந்து உருவாக்கப்பட்டுள்ளது.