இப்ப புரியும் பாருங்க……
முகநூல் நண்பர் surya born to win தனது முகநூல் பக்கத்தில் இந்தப் பாடத்தை வெளியிட்டுள்ளார். மனப்பாடம் செய்யாமல் எதையும் புரியும்படி நடத்தினால் மாணவச் செல்வங்களுக்கு எளிதில் புரியும். எப்படி நடத்தினால் புரியும்… இதைப் படிங்க பிஞ்சு களே… ஆசிரியர்களே… நீங்களும்தான்.
நியூட்டன் தன் மூன்று விதிகளையும் எப்படி கண்டுபிடித்து இருப்பார் என்பதனை கற்பனையாகச் சொல்லலாம் இப்படி எல்லோருக்கும் எளிதாக புரியும் வண்ணம்!
——————————————————————————-
ஒரு மாடு நடந்து போய்க்கொண்டு இருந்தது.
ஒருவர் அதை நிறுத்தினார்.. மாடும் நின்றது.
உடனே முதல் விதி உதயமானது
“”ஒரு பொருளின் மீது வெளிப்புற விசையொன்று செயல்படும் வரை எந்த ஒரு பொருளும் தனது ஓய்வு நிலையையோ அல்லது நேர்க்கோட்டில் அமைந்த சீரான இயக்க நிலையையோ மாற்றிக் கொள்ளாது””
“An object continue to moves, unless it is stopped” இது விதி எண் : 1
அதன் பிறகு தன் பலம் முழுவதையும் சேர்த்து மாட்டிற்கு ஒரு உதை கொடுத்தார் அவர். மாடு மா (MA) என்று கதறியது.. உடனே இரண்டாம் விதி பிறந்தது
“”பொருளின் உந்தம் மாறுபடும் வீதம் அதன்மீது செயல்படும் விசைக்கு நேர்த்தகவில் இருக்கும்””
F=MA இது விதி எண் : 2
சிறிது நேரத்தில் தன் கோபம் அனைத்தையும் சேர்த்துவைத்து அவரை மாடு உதை உதையென்று உதைத்தது.. உடனே மூன்றாம் விதி கருவுற்றது
“”ஒவ்வொரு வினைக்கும் சமமான எதிர் வினை உண்டு.””
“Every action has an equal and opposite reaction” இது விதி எண் : 3
இனி யாருக்காவது நியூட்டன் விதிகள் மறக்குமா??