விண்ணில்…
செவ்வாய் இப்போது…
கண்டம் விட்டு கண்டம் மட்டுமல்ல, அண்டம் விட்டு அண்டம்கூடப் பாய்வது அறிவியல் மட்டும்தான். நாள், கிழமை, நட்சத்திரம் பார்த்து நல்லநேரம், கெட்டநேரம் கணித்த திண்ணைச் சோம்பேறிகள் இன்னும் செவ்வாய் அது வெறும் வாய் என வெட்டி வேதாந்தம் பேசிக்கொண்டிருக்கிறார்கள். ஆனால், அமெரிக்க நாட்டு நாசா விஞ்ஞானிகள் செவ்வாய்க்கே செலுத்திவிட்டார்கள் செயற்கைக் கோளை! அதில் பொருத்தப்பட்டிருக்கும் ஒளிப்பதிவுக் கருவி படம் எடுத்து அனுப்பியபடி இருக்கிறது.
செவ்வாய்க்கோளில் என்னென்ன இருக்கின்றன என்பதை அந்தப்படங்கள் எடுத்துக் காட்டுகின்றன. பானாரோமிக் கேமரா மூலம் 817 படங்கள் எடுக்கப்பட்டுள்ளன. அவற்றில் சிலதான் இவை. செவ்வாயால் அமெரிக்காவுக்கு புகழும் பெருமையும் வருவாய்தான்.