உலக நாடுகள் அக்ரோட்டிரி மற்றும் தெக்கேலியா
இவை பிரிட்டனின் நிர்வாக ஆளுகைக்கு உட்பட்ட ராணுவத் தளப்பகுதிகள் அமைவிடம் : அய்ரோப்பாவின் மெடிடேரியன் கடற்கரையில் சைப்ரஸ் தீவில் தீபகற்பம் போல அமைந்துள்ளது. 1960 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது.
மொத்த பரப்பளவு : 254 சதுர கிமீ,
கடற்கரை எல்லை : 56.3 கிமீ
சூழல்: தீவைச் சுற்றிலும் உப்பு ஏரி உள்ளது, பச்சை ஆமைகள் இனப்பெருக்கம் செய்ய ஏற்ற சூழல் கொண்ட இடம்.
பேசும் மொழி: ஆங்கிலம், கிரேக்கம்
கொடி:பிரிட்டனின் கொடி மற்றும் சின்னம்
தலைநகரம்: எபிஸ்கோபி
நாணயம்: ஈரோ
மக்கள் தொகை: 14,000 (அதில் 7,000 பேர் சைப்ரஸ் பூர்வீகக் குடிகள் மற்றும் 7,000 பேர் பிரிட்டன் ராணுவத்தினர் மற்றும் அவர்களின் குடும்பத்தினர்)
நாட்டின் நிர்வாகி: ஏர் வைஸ் மார்சல் கிரஹாம் ஸ்டேசி. இவர் பிரிட்டீஸ் சைப்ரஸ் படையின் கமாண்டர் பிரிட்டன் அரசி இவரை நியமனம் செய்கிறார்.
– அதிரை சங்கர்