லண்டன் ஒலிம்பிக் 2012

ஒலிம்பிக்கில் இந்தியா
இந்த முறை இந்தியா குறிப்பிடத்தக்க வெற்றிகளைப் பெற்றுள்ளது.13 போட்டிகளில் 83 விளையாட்டுவீரர்கள் கலந்துகொண்டனர். இவர்களில் 2 வெள்ளி 4 வெண்கலப் பதக்கங்களைக் கைப்பற்றி, பதக்கப் பட்டியலில் இந்தியா 55 ஆவது இடம் பெற்றது.
விஜய் குமார் துப்பாக்கி சுடுதல் (25 மீட்டர்) வெள்ளிப் பதக்கம்
சுஷில் குமார் மல்யுத்தம் (66 கிலோ எடைப்பிரிவு) வெள்ளிப் பதக்கம்
ககன் நரங் துப்பாக்கிச் சுடுதல் (10 மீட்டர்) வெண்கலப் பதக்கம்
சாய்னா நெய்வால் பூப்பந்து வெண்கலப் பதக்கம்
மேரி கோம் குத்துச் சண்டை வெண்கலப் பதக்கம்
யோகேஷ்வர் தத் மல்யுத்தம் (60 கிலோ எடைப்பிரிவு) வெண்கலப் பதக்கம்
ஜமைக்கா நாட்டைச் சேர்ந்த உசேன் போல்ட் கருப்பர் இனத்தில் பிறந்தவர். சிறந்த தடகள வீரரான அவர், இது வரை யாரும் செய்யாத சாதனையாக தொடர்ந்து இரண்டு ஒலிம்பிக்குகளில் (2008, 2012) 100 மீட்டர், 200 மீட்டர் ஓட்டப் பந்தயங்களில் வென்று சாதனை படைத்திருக்கிறார். 4 ஙீ 100 மீட்டர் தொடர் ஓட்டத்திலும் தனது சகாக்களுடன் சேர்ந்து வென்று சாதனை படைத்திருக்கிறார். தகுதியும் திறமையும் நிறம், குலம், ஜாதி பார்த்தா இருக்கிறது? ஒடுக்கப்பட்ட இனத்திலிருந்து வென்ற அந்த வீரனை நாமும் வாழ்த்துவோம்.