சூழல் காப்போம்-6
கரண்ட் கட்
சாப்பிட உட்கார்ந்தேன்! கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லை. கரண்ட் கட்.
இப்படிக் கவிதை எழுதும் நிலைமையில்தான் இருக்கிறது தமிழகம் முழுக்க! எங்கு பார்த்தாலும் மின்வெட்டு. ஒரு நாளைக்கு ஒரு மணிநேரம், இரண்டு மணிநேரம் என்று தொடங்கி இப்போது 12 மணிநேரத்தைத் தாண்டிக் கொண்டி-ருக்கிறது. எப்போது வரும் போகும் என்ப-தெல்லாம் அவர்களுக்கே வெளிச்சம்-; நமக்கு இருட்டு என்று போய்க்கொண்டிருக்கிறது நமது நிலைமை.
என்ன காரணம்? மின்சாரம் கண்டுபி-டிப்பதற்கு முன்பு, எதுவும் இல்லாமல் தானே இருந்தது. அப்போதெல்லாம் இவ்வளவு சிரம-மாகத் தோன்றவில்லையே! தோன்றியி-ருக்காதே! ஆனால், இப்போது தோன்றுவதற்குக் காரணம் இருக்கிறது. மின்சக்தியில் இயங்கும் கருவிகளை நாம் நிறையப் பயன்படுத்தத் தொடங்கி விட்-டோம். உடல் உழைப்பைக் குறைக்கத் தானே இயந்திரங்களை உருவாக்கியது அறிவியல்.
விவசாயத்திற்கு நீர் இறைக்க சிரமப்பட வேண்டி-யிருக்கிறது; அதிக உடல் உழைப்பு தேவைப்-படுகிறது; நீண்ட நேரம் ஆகிறது என்பதால் நீர் இறைக்க இயந்திரம் தேவைப்-பட்டது. இப்படித்–தான் எல்லா இயந்திரங்களும் மனிதனின் வேகமான தேவைக்காக உருவாக்கப்-பட்டன. அவற்றை இயக்க நிறைய ஆற்றல் தேவைப்பட்டது.
தொடக்கத்தில் விலங்குகளின் ஆற்றல் பயன்படுத்தப்பட்டது; சிறிய விசைகளை வைத்துப் பெரிய இயந்திரங்களை இயக்கும் முறை கண்டுபிடிக்கப்பட்டது. அதாவது மிதிவண்டியின் அச்சு (Pedal) சிறியதாக இருந்தாலும், பெரிய சக்கரங்களை இயக்குவது போல! அதன் பிறகு நீராவி பயன்படுத்தப் பட்டது… எரிபொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டு ஆற்றலாகப் பயன்படுத்தப்-பட்டன. அவைதான் டீசல், பெட்ரோல் போன்-றவை. விளக்கு எரிக்கவும், இன்னும் இது போன்ற அடிப்படைப் பணிகளுக்கும் பயன்படுத்தப்பட்டு வந்த மின்சாரத்தை அனைத்து இயந்திரங் களுக்கும் பயன்படுத்தத் தொடங்கினோம்.
அத-னையே முதன்மை எரிபொருளாக மாற்றும் முயற்சியில் இன்றும் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறோம். அதனால் தான் வாகனங்களுக்கும் மின் ஆற்றலைப் பயன்படுத்தமுடியுமா என்று முயற்சித்து வருகிறோம். தொழிற்சாலைகளில் ஆற்றலாக மின்சாரம் பயன்படுத்தப்பட்டது – அது உற்பத்தி நோக்கில். அதே சமயம் நாமும் அதிக அளவில் வீட்டுப் பயன்பாடுகளுக்கு மின் ஆற்றலைப் பயன்படுத்தத் தொடங்கிவிட்டோம். என்ன? நான் சொல்வது சரிதானே!
அரைப்பான் (Mixer Grinder), அரவை இயந்திரம் (Grinder), சலவை இயந்திரம் (Washing Machine), தேய்ப்பான் (Ironing Box), தண்ணீர் சூடேற்றும் கலன்(Water heater), அறைக்கு அறை குளிரூட்டி (Air conditioner), குளிர்சாதனப் பெட்டி (Refrigerator), கணிப்பொறி (Computer), மின்விசிறி (Fan), மின்விளக்கு (Bulbs), தொலைக்காட்சி (Television), அது தொடர்பான இதர கருவிகள்… இப்படி பட்டியல் போட்டால் நீண்டுகொண்டே இருக்கிறது. நம் வாழ்வின் எந்த ஒரு நொடியையும் மின்சாரம் இல்லாமல் செலவழிக்க முடியாது என்ற நிலைக்கு நாம் வந்துவிட்டோம்.
தேவைக்கு ஏற்ப உற்பத்தி செய்யமுடிகிறதா? இல்லையா? அதற்கு என்ன செய்யவேண்டும்? என்பதெல்லாம் பிறகு! முதலில் நமக்குத் தேவையானவை எவை? என்று பார்ப்போம். அதற்கும் முன்னதாக, நாம் பயன்படுத்துபவற்றில் எவ்வெவற்றை வீணடிக்-கிறோம் என்பதைப் பார்ப்போம்.
வீண் செலவைக் குறைத்தாலே சிக்கன வாழ்வு-தான். அது காசோ, கரண்டோ! அதுவும் நமது நாட்டில் எதையுமே தேவைக்கு மட்டும் பயன்படுத்தும் பழக்கம் நமக்கில்லாமல் போய்விட்டது. யோசித்துப் பாருங்கள். நாம் எப்படியெல்லாம் மின்சாரத்தை வீணடிக்கிறோம் தெரியுமா?
பொது இடங்களைக் கவனியுங்கள். கோவில் என்ற பெயரிலும், திருவிழாக்கள் என்ற பெயரிலும் குட்டி குட்டி மஞ்சள் விளக்குகளைப் பயன்படுத்தி அலங்காரம் செய்கிறோம் — எவ்வளவு மின்சாரம் வீண்! இதையே அரசியல் இயக்கங்களும் பின்பற்றுகின்றன. அரசியல் கட்சிகள் எப்போதாவது பயன்படுத்தினால், மாதாமாதம், வாராவாரம் திருவிழா, பண்டிகை, கோவில் என்று ஏதாவது ஒரு காரணத்தைச் சொல்லி வீணடிக்கும் பழக்கம் எல்லா மதக் கோவில்களிலும் உள்ளது. பகல் நேரத்திலும் தவறுதலாக எரியவிடப்படும் தெரு-விளக்குகளால் எவ்வளவு நட்டம்?
அதே வேளையில் நம் வீட்டில் நாம் செய்யும் வீண்கள்…?
ஆளில்லாத அறையில் ஓடும் மின்-விசிறி, மின்-விளக்கு, நிரம்பிய-பின்னும் அணைக்-கப்படாத நீரேற்றும் இயந்திரம் (Motor), யாருமே பார்க்-காமல் ஓடிக் கொண்டிருக்கும் தொலைக்-காட்சிப் பெட்டி, நீண்ட நேரம் வேலை-யில்லாமல் இயக்க வைக்கப்-பட்டிருக்கும் கணினி, சூடான பின்னும் அணைக்-கப்படாத சூடேற்றும் கருவி, ஒரே நேரத்தில் ஆளுக்-கொரு அறையில் அமர்ந்து கொண்டு வேலை செய்வதால் இயக்கப்படும் கருவிகள், கதவை மூடிவிட்டு அணைக்க மறந்த கழி-வறை மின்விளக்கு, ______________, ______________, ______________ இந்த காலியிடங்களில் வேறு எப்படியெல்லாம் நாம் மின்சாரத்தை வீணடிக்-கிறோம் என்பதை— நீங்களே நிரப்புங்கள்.
இவையெல்லாவற்றையும் கூடுமான அளவு கட்டுப்படுத்தினாலே நம்மால் எவ்வளவோ சேமிக்க முடியும். மின்வெட்டு ஏற்படும் நேரத்-தில் எல்லோரும் சேர்ந்து ஒரே இடத்தில் அமர்ந்து ஒரு விளக்கின் கீழ் அவரவர் வேலை-களைச் செய்வதில்லையா? (வேற வழி-ங்கிறீங்-களா?) அதைப் போல பெரும்பாலும் நமது பணிகளை நாம் ஒழுங்கமைத்துக் கொள்ள வேண்டும். மின்சாரத்தைக் கூடவா சிக்கனமாக செலவழிக்க வேண்டும்? எதை எடுத்தாலும் சிக்கனம்.. சிக்க-னம்.. என்றால் எப்படி? என்று சிலர் யோசிக்-கலாம்.
காரணம் இருக்கிறது. மின் ஆற்றலைப் பெற நாம் பல வழிகளைக் கைக்கொள்கிறோம். நீர் மின்சாரம், அனல் மின்சாரம், அணு மின்சாரம், காற்றாலை மின்சாரம், சூரிய ஒளி மின்சாரம், கடல் அலை மின்சாரம், மாற்று மின்சார முறைகள் போன்றவை. இவற்றில் நீர், அனல், அணு – மூன்றைத்தான் நமது அரசு பெரிதும் பயன்படுத்துகிறது. அனல் மின்சாரம் – நிலக்-கரியை எரித்து உருவாக்கப்படுவது. அதனால் உண்டாகும் சூழல் கேடு; அணு மின்சாரம்- அதனால் கதிர்வீச்சு அபாயம்.
இப்படி மின் தேவைகளுக்காக நாம் அதிகம் நமது சூழலைக் குலைத்துக் கொண்டிருக்கிறோம். கேடு இல்லாத சூரிய ஒளி மின்சாரத்தை இன்னும் பெரிய அள-வில் நாம் பயன்படுத்தவில்லை; அரசும் யோசிக்கவில்லை.
இப்படி மின் ஆற்றலைப் பெற நாம் பெரும் இழப்புகளைச் சந்திக்க வேண்டிய சூழலில் வீணாக நாம் மின்சாரத்தை வீணாக்கலாமா? குண்டு பல்புக-ளுக்குப் பதில் குழல் விளக்குகள் (Tube Lights), குழல் விளக்குகளை விட சிக்கன-மாக சி.எஃப்.எல் விளக்-குகள் என்று நாம் யோசிக்கிறோம். சி.எஃப்.எல் விளக்குகளில் உள்ள குறை-பாடுகளை நீக்கவும், சூழல் காக்கவும் ஆய்வு செய்துவருகிறார்கள் அறிவிய-லாளர்கள்.
நம் நாட்டில் இன்றைக்கு ஏற்பட்டி-ருக்கும் பற்றாக்குறை என்பது, சரியான திட்டமிடல்கள் இல்லாததனால் உருவான-தாகும். வளர்ந்துவரும் மக்கள் தேவைக்கேற்ப புதிய மின் திட்டங்களைத் தொடங்காமல் விட்டு-விட்டார்கள் பத்து ஆண்டு-களுக்கு முன்பும் ஆட்சி செய்த இன்றைய ஆட்சியாளர்கள். கலைஞர் தாத்தா வந்து உரு-வாக்கிய மின் திட்-டங்கள் விரைவில் செயல்பட உள்ளன. எனவே பிரச்சினை சரியாகிவிடும்.
ஆனால் நாம் சொல்லும் மின்சார சிக்கனம், இந்தப் பற்றாக்குறை காரணமாக அல்ல. மின் உற்பத்தியில் சிறந்து விளங்கும் நாடுகளிலும் மின்சார சிக்கனம் வலியுறுத்தப்படுகிறது.. வேறு எதற்கு? சூழலைக் காக்கவும்… நம் உடம்பைக் காக்கவும்… எப்படி? அடுத்த இதழில்…
(காப்போம்)