உலக நாடுகள்
அமைவிடம் : கரீபியன் கடல் மற்றும் அட்லாண்டிக் பெருங்கடலின் இடையே அமைந்துள்ள இரட்டைத் தீவுகள்
பரப்பளவு : 440 சதுர கிலோ மீட்டர்கள்
தலைநகரம் : செயிண்ட் ஜோன்ஸ்
மக்கள் தொகை : 81,800 (2011 ஆம் ஆண்டுக் கணக்கெடுப்பின்படி) பெரும்பான்மையோர் கிறித்துவ மதத்தினர்
கறுப்பின மக்கள் : 91 விழுக்காடு
வெள்ளையர்கள் : 1.7 விழுக்காடு
பிறர் : 7.3 விழுக்காடு
அலுவல் மொழி : இங்கிலீஷ்
உள்ளூர் மொழி : ஆண்டிகுவன் கிரியோல்
ஆட்சிமுறை : நாடாளுமன்ற ஜனநாயக முறையில் இயங்குகிறது. 1981 நவம்பர் 1ஆம் நாள் இங்கிலாந்திடமிருந்து விடுதலைபெற்றது.
அதுவரை அதன் ஆளுகைக்கு உட்பட்ட அயல்நாடாக இருந்தது.எலிசபெத் அரசியே இதன் தலைவராக இருந்தார்.
ஆளுநர் : டேம் லூயிஸ் லேக் டேக்
தலைமை அமைச்சர் : பால்ட்வின் ஸ்பென்சர்
தொழில் : சுற்றுலாவே முதன்மைத் தொழிலாக உள்ளது.படகு ஓட்டுதலுக்கு முகச் சிறந்த கடல் பகுதியாகக் கருதப்படுகிறது.