உலக நாடுகள்
அருபா (ARUBA)
அமைவிடம் : கரீபியன் பெருங்கடலில் அமைந்துள்ள தீவு. வெனிசூலா கடற்கரைக்கு வடக்கேயும், கொலம்பியாவுக்கு கிழக்கேயும் உள்ளது.
பரப்பளவு : 179 சதுர கிலோ மீட்டர்கள்
தலைநகரம் : ஒரான்ஞ்செஸ்டாட்
மக்கள் தொகை : 2010 ஆம் ஆண்டுக் கணக்கெடுப்பின் படி 1,01,484
அலுவல் மொழிகள் : டட்ச்சு மற்றும் பாப்பியாமெண்டொ(போர்த்துகீசிய மொழிக்குடும்பத்தின் ஒரு மொழி)
ஆட்சி முறை : நெதர்லாந்து மன்னராட்சியின் கீழ் இயங்கும் சட்டப்படி அமைக்கப்பட்ட நாடு. நாடாளுமன்ற ஜனநாயக முறையில் இயங்குகிறது. (21தொகுதிகள்-)
மன்னர் : நெதர்லாந்து நாட்டின் அரசி பீட்ரிக்ஸ்
ஆளுநர் : ப்ரெட்டிஸ் ரெஃபுஞ்சால்
தலைமை அமைச்சர் : மைக் ஈமேன்
தொழில் : சுற்றுலா,தங்கச் சுரங்கம், பாஸ்பேட் சுரங்கம், அலோய் ஏற்றுமதி மற்றும் பெட்ரோலியம் சுத்திகரிப்பு
– அதிரை சங்கர்