குறும்புக்காரி
டீச்சர் : நான் முதல்ல உங்கிட்ட இரண்டு முயல் கொடுக்கிறேன். அப்புறம் ரெண்டு. அப்புறம் ரெண்டு. மொத்தம் எவ்வளவு?
சிறுமி : ஏழு.
டீச்சர் : கவனமா கேளு. முதல்ல உங்கிட்ட இரண்டு முயல் கொடுக்கிறேன். அப்புறம் ரெண்டு. அப்புறம் ரெண்டு. மொத்தம் எவ்வளவு?
சிறுமி : ஏழு.
டீச்சர் : சரி வேறு மாதிரி சொல்றேன். முதல்ல ரெண்டு ஆப்பிள் கொடுக்கிறேன். அப்புறம் ரெண்டு. அப்புறம் ரெண்டு மொத்தம் எவ்வளவு?
சிறுமி : ஆறு.
டீச்சர் : வெரிகுட். இப்ப மறுபடியும் முயல் கணக்கு பாரு. மொத்தம் எவ்வளவு?
சிறுமி : ஏழு.
டீச்சர் : எப்படி? சிறுமி : எங்கிட்ட வீட்ல ஒரு முயல் இருக்கே!
– முகநூலில் கார்த்திக் டி.பி.ஆர்