இறக்கை இல்லா மின்விசிறி
மின் விசிறியிலிருந்து காற்று வீசுவதற்குக் காரணம் அதில் உள்ள இறக்கைகள் தானே? இந்த மின்விசிறியில் இறக்கைகள் இல்லை;
ஆனால், காற்று சுகமாக வீசும். இந்த மின்விசிறியின் கீழே உள்ள துளைகளின் வழியே வெளிப்புறக் காற்றை மோட்டார் மூலம் உள் இழுத்து அதனை மேலே உள்ள வட்ட வடிவ வளையத்தினுள் செலுத்துகிறது.
அதில் உள்ளே இருக்கும் சிறு சிறு தகடுகள் அந்தக் காற்றை வாங்கி வெளிவிடுகின்றன. அப்போது மேலும் வெளிப்புறக்காற்றும் இணைந்து அதிக அளவில் சுகமாக காற்று நமக்குக் கிடைக்கிறது.
வழக்கமான மின் விசிறியில் இருந்து கிடைக்கும் காற்றைவிட இந்த விசிறியில் ஒரே அளவில் சீராக காற்று கிடைக்கும் என்பது இதன் சிறப்பம்சம்.