நிலவுக்குச் சுற்றுலா
1968 ஆம் ஆண்டில் மனிதன் முதன்முதலில் நிலவில் கால் வைத்தான். இது நடந்து 45 ஆண்டுகளுக்குப் பிறகு இப்போது மனிதர்கள் நிலவுக்கு சுற்றுலா செல்லப் போகிறார்கள்.
உலகம் முழுதும் சுற்றி அலுத்து விட்டதல்லவா? விண்வெளியில் தங்கும் விடுதி அமைத்து அங்கு மனிதர்களை அழைத்துச் செல்லும் லணியை ஒரு ரஷ்ய நிறுவனம் தொடங்கியிருக்கும் செய்தியை கடந்த இதழில் படித்திருப்பீர்கள்.
இது லண்டனைச் சேர்ந்த எக்ஸ்காலிபர் அல்மாஸ் என்ற நிறுவனம் நிலவுக்கு சுற்றுலா அழைத்துச் செல்லும் செய்தி. இன்னும் இரண்டு ஆண்டுகளில் அதாவது 2015 ல் நிலவுச் சுற்றுலா தொடங்கப்போகிறது. நிலவுக்கு சென்றுவர செலவு எவ்வளவு தெரியுமா? 700 கோடி ரூபாயாம். இதற்காக ரஷியாவிடம் இருந்து 6 சிறப்பு விண்கலங்களை வாங்கிவிட்டார்கள்.
ஒரு விண்கலத்தில் 3 பேர் மட்டுமே பயணிக்க முடியுமாம். முதல் சுற்றுலாவில் 18 பேர் செல்லப் போகிறார்கள். அதற்கான முன் பதிவும் ஆரம்பித்து விட்டார்கள். பூமியில் இருந்து 3 இலட்சத்து 76 ஆயிரத்து 586.5 கி.மீட்டர் தூரம் சென்று திரும்பும் இச்சுற்றுலா தொடர்பான செயல்முறை விளக்கத்தையும் காட்டிவிட்டர்கள்.