இணையச் சாதனைகள்
உலகில் பல்வேறு சாதனைகள் நிகழ்த்தப்படுகின்றன. அதில் இணையச் சாதனைகளும் முக்கியமானதல்லவா!
இதோ இணையத்தில் நிகழ்த்தப்பட்ட சாதனைகள் சில:-
- உலகின் முதல் இணையதளம் www.symbolics.com. இந்த இணையதளம் 1985 ஆம் ஆண்டு மார்ச் 15 ஆம் நாள் தொடங்கப்பட்டது. தற்போது ஏறத்தாழ 10 கோடி இணையதளங்கள் உள்ள நிலையில் இந்த இணையதளத்தை மிகப் பழைய இணையதளம் என்றுதானே சொல்லவேண்டும்.
- Llanfairpwllgw- yngyllgogerychwyrndrobwll – Llantysiliogogoch.com – என்னடா இது என்கிறீர்களா? இதுதான் உலகின் மிக நீண்ட இணையதள முகவரி. 69 எழுத்துக்கள்(characters) கொண்டது இந்த இணையதள முகவரி.
- youtube இணையதளத்தில் உலகத்திலேயே அதிகம் பேர் பார்த்து ரசித்த காட்சி இந்தக் குழந்தையின் குறும்புதான். தன்னுடன் உள்ள இன்னொரு குழந்தையின் கையைக் கடித்துவிட்டு சிரிக்கும் இக்குழந்தையின் சிரிப்பை, கடந்த ஜூன் 2012 வரை மட்டும் 75 கோடியே 54 இலட்சத்து 79 ஆயிரத்து 979 முறை பார்த்து உலகம் ரசித்துள்ளது.
- உலகின் மிக விரைவான இணைய இணைப்புக் கிடைக்கும் நாடு தென்கொரியா.
- உலகின் மிக அதிக செலவு பிடிக்கும் இணைய இணைப்பு நிறுவனம் www.insure.com
- உலகின் மிக உயரத்தில் பொருத்தப்பட்டுள்ள வெப் கேமரா இமயமலையின் எவரெஸ்ட் சிகரத்தில் பொருத்தப்பட்ட கேமராதான். இந்தக் கேமரா எடுத்த படம்தான் இது.