பகலவனின் நீங்கா நினைவு
பகுத்தறிவு என்றவுடன் பளிச்சென வருவது என் தந்தை முகம்;
அதுவே தந்தை பெரியார் முகம்!
பகுத்தறிவு முத்தெடுத்தேன்
பெரியாரியல் என்னும் கடலில்!
சாமி என்னும் புரட்டுக்கு சாவுமணி அடித்தாய்
ஜாதி என்னும் சாவாப்பிணியை சங்கறுத்தாய்
நிமிராத பெண்ணினத்தை
வேங்கை நடை நடக்க செய்தாய்!
அறிவு என்னும் ஊற்றில்
பகுத்தறிவு என்னும் நீரைப் பாய்ச்சினாய்!
சாவிற்கே சவால் விட்டு
சாதிக்க அரியதையும் சாதித்தாய்
காலமெல்லாம் காணாமல் இருந்த
சுயமரியாதைச் சூரியனை ஒளிர செய்தாய்!
பகுத்தறிவை தந்தது நீரே; அதை
பறைசாற்றியது ஓயாது ஒலிக்கும் வீரமணியார்!
சூத்திரன் என்று ஒடுங்கிய சமதாயத்தை
சாத்திரம் என்று கூறி அடங்கிய அறிவை
தகர்த்தது என் பகலவனின் தடியே!
எங்கே மூடநம்பிக்கை வீழ்ந்ததோ
எங்கே நம்பிக்கை எழுந்ததோ
அங்கே ஒலிக்கும் ஒரே குரல்
பெரியாரின் கொள்கை வாரிசு
வீரமணியாரின் குரலே!
இனப்பிரச்னையென ஈழப்பிரச்னையை
இடியாய் எதிர்த்தது
பெரியாரின் கொள்கை குரல்
அதுவே திராவிடத்தின் குரல்
ஜாதியால் சமாதியாக்கப்பட்ட சமுதாயத்தினைச்
சூறாவளியாய் சுழன்று எதிர்த்தது
வீரமான மணி அவரே வீரமணி!
ஆசைக்கடலில் மூழ்கி அரசியலில் தாவும் மானுடனுக்கு இடையே
அறிவுக்கடலில் மூழ்கி ஆராய்ந்த
இயக்கம் திராவிடர் இயக்கம்!
ஆயிரத்திலே ஒருவனாக நீர் பிறந்திருக்கலாம்
ஆனால் உன்னைப்போல் ஒருவனைக் கண்டதில்லை
வாழ்ந்த காலங்கள் யாவும்
நடைநூலகமாக திகழ்ந்தவரே!
ஜாதி சாகும் வரை;
பெண்ணடிமை நீங்கும் வரை;
ஆரியப்படையெடுப்பு அழியும் வரை;
உன் கொள்கை முரசம் ஒலிக்கும்!
சே.மெ.மதிவதனி
12ஆம் வகுப்பு, பழனி