சவமும் சாமியும்
சவம் நிகழ்வுகள் :
1. உயிர் அற்ற மனித உடல் சவம் (பிணம்)
2. மலர்மாலைகள் போடப்படுகிறது.
3 ஆடை சரிசெய்து வாசனை திரவியம் தெளிப்பதுண்டு..
4. கோடித் துணி(புதியது) அணிவிப்பதுண்டு.
5. சூடம் ஆராதனை சிலர் செய்வதுண்டு.
6. கணவன் இறந்தால் மனைவி தாலி அறுத்து கைவளை ஒடித்து ஒப்பாரி வைப்பதுண்டு.
7. கை பாடை, தேர்பாடை, பல்லக்கு பாடை, சதுர பாடை போன்ற பாடைகளில் பிணத்தை தூக்கி செல்வதுண்டு..
8. பாடையை தூக்கி செல்ல நான்குபேர் தேவை.
9. நெருப்பு சட்டி எடுத்து செல்வார்கள்.
10. நையாண்டி மேளம், தாரை, தப்பு, சங்கு ஊதுதல், சேகண்டி அடித்தல், வாண வேட்டுகள், வெடி வெடித்தல் நிகழ்த்துவதுண்டு.
11. சவம் குழியில் இறக்கி வைக்கப்படுகிறது. சிலர் எரியூட்டுகின்றனர்.
12. மடாதிபதிகள் இறந்தால் சமாதி செய்கையில் தலையில் தேங்காய் உடைத்து கபாலம் திறந்ததும் சமாதி செய்யப்படுகிறது.
13. சவத்திற்கு பால் ஊற்றுவார்கள்.
14. இறந்த பிறகு பேய், பிசாசு, ஆவி என்பது பொய்.
சாமி நிகழ்வுகள் :
1. கடவுள் சிலைகள் உயிர் அற்றவை (அஃறினை பொருள்)
2. மலர்மாலை சாத்துதல், மலர் தூவுதல் உண்டு.
3. ஆடை அலங்காரம், மலர் அலங்காரம் செய்வது மற்றும் சந்தனம் பன்னீர் அபிஷேகம் செய்வதுண்டு.
4. பட்டாடை சாற்றுதல் உண்டு.
5. சூடம், நெய்விளக்கு ஆராதனை நடைபெறுகிறது.
6. அரவாணிகள் கூத்தாண்டவர் கோயிலில் தாலி அறுத்து கைவளை ஒடித்து ஒப்பாரி வைத்து அழுவது ஆண்டுக்கு ஒருமுறை நடைபெறுகிறது.
7. பல்லக்கு, தேர், சப்பரம் என்று சாமி சிலைகள் வீதியுலா வருவதுண்டு.
8. சாமியையும் தூக்கி செல்ல நான்குபேர் தேவை.
9. தீவெட்டி எடுத்து செல்வதுண்டு.
10. மேளம், தாரை, தப்பட்டை, கொம்பு ஊதுதல், எக்காளம் ஊதுவது, வாண வேடிக்கை, வெடி வெடித்தல் நிகழ்த்துவதுண்டு.
11. மதுரை வைகை ஆற்றில் சாமி கள்ளர் அழகர் இறக்கி வைக்கப்படுகிறார். காமன் கடவுள் மன்மதசாமி ஆண்டுக்கு ஒருமுறை எரியூட்டப்படுகிறார்.
12. வேண்டுதல் என்ற பெயரால் தலையில் தேங்காய் உடைக்கும் பழக்கம் நடைபெற்றுக் கொண்டுள்ளது.
13. சாமி சிலைகளுக்கு பால் அபிஷேகம் நடைபெறும்.
14. கடவுள் அருள்பாலிக்கிறார், தண்டிப்பார், மீண்டும் உயிர் பெற்று வருவார் என்பது பொய்.
– க.செல்வராசு, சித்தர்க்காடு