விடுகதைகள்
1. குதி குதி எனக் குதிக்கிறான்
கொட்டைப் பல்லால் சிரிக்கிறான். — அவன் யார்-?-
2. பச்சைக்கதவு
வெள்ளைச் சன்னல்
உள்ளே கறுப்பு ரோஜா. – அது என்ன-?
3. பொந்திலே இருப்பவன்
கொம்பிலே சுற்றுவான்
வம்பிலே வீழ்பவன். – அது என்ன-?
4. மஞ்சள் உறையில் மறைந்திருப்பான்
மக்கள் இதயத்தில் மலர்ந்திருப்பான். – அவன் யார்-?
5. உச்சாணிக் கொம்பிலே
உட்கார்ந்த நிலையிலே
கோடாலி மூக்கன்
கொட்டைப் பாக்கை வெட்டுறான். – அவன் யார்-?
6. கழுத்தை வெட்டுவான்
கையை வெட்டுவான்
அவனை ஏனென்று கேட்போர்
ஒருவரும் இல்லை. – அவன் யார்-?
7. வாழ்நாள் எல்லாம்
வாயைத் திறந்திருக்கும். – அது என்ன-?
8. வெளுக்காத போர்வை
வெண்மையாக இருக்கும்
நிரப்பாத குடம்
நிறைந்தே இருக்கும். – அது என்ன-?
9. சித்திரையில் சிறு பிள்ளை
வைகாசியில் வளரும் பிள்ளை
ஆனியில் அழகுப் பிள்ளை
ஆடியில் விழும் பிள்ளை. – அவன் யார்-?
10. செக்கச் சிவந்திருப்பாள்
செவ்வாழை போலிருப்பாள்
வாலும் முளைத்திருப்பாள்
வந்திருப்பாள் சந்தையிலே. – அது என்ன-?
விடைகளைக் காண இங்கு அழுத்தவும்….