கவிதை
பெண்ணினம்
சமத்துவமாய்
பூத்துக்குலுங்க
பாடுபட்ட
பெரியாரின்
படத்திற்கு – ஒரு
பெண் மொட்டு
மாலையிட்டு
மரியாதை செலுத்துகிறது.
-காரை.புரட்சிமணி
வடவேர்
மேகத்தை நேசித்தேன் – மறைந்து விட்டது
நிலவை நேசித்தேன் – தேய்ந்து விட்டது
பறவைகளை நேசித்தேன் – பறந்து விட்டன
கல்வியை நேசித்தேன் – என்னை கரை சேர்த்து விட்டது.
கனவு என்பது காலை வரை
கல்வி என்பது கல்லறை வரை.
– அ.பெரியார் செல்வம்
பாலையம்பட்டி