இரும்பு
- இரும்பு ஓர் உலோகத் தனிமம் ஆகும்.
- பூமியின் மேற்பரப்பில் அதிக அளவில் கிடைக்கும் உலோகத் தனிமங்களில் இரும்பு நான்காவது இடத்தைப் பெற்றுள்ளது.
- இரும்பு தரையில் மட்டுமின்றி, நீரிலும் இரத்தத்திலும் இரும்புச் சேர்மங்களாக அமைந்துள்ளது.
- ஆக்சிஜன், மண், கல் போன்றவற்றுடன் கலந்து காணப்படும் கலப்புப் பொருள் இரும்புத் தாது எனப்படுகிறது.
- 5,000 ஆண்டுகளுக்கு முன்பே எகிப்தியர்கள் இரும்பாலான நகைகளை அணிந்திருந்ததாக வரலாற்றுக் குறிப்பு உள்ளது.
- மனித நாகரிகத்தின் முதிர்ச்சிக் காலத்தை இரும்புக்காலம் என மானிடவியல் அறிஞர் கூறுவர்.
- பண்டைக் காலம் முதலே இந்தியரும் சீனரும் அன்றாட வாழ்வில் இரும்பாலான பொருட்களைப் பயன்படுத்தி உள்ளனர்.
- கி.மு. 300க்கு முன்னரே எகிப்தியர்களும் சிரியர்களும் இரும்பால் செய்யப்பட்ட பல பொருள்களைப் பயன்படுத்தி உள்ளனர்.
- இந்தியர்கள் இரும்பைப் பிரித்தெடுக்கும் முறையிலும், எஃகு தயாரிப்பிலும் சிறந்து விளங்கியுள்ளனர்.
- இரும்பைத் தாதுவிலிருந்து பிரித்து எடுக்க உதவும் உலைக்கு ஊது உலை என்று பெயர்.
- ஆக்சைடுகளும், கார்பனேட்டுகளும் முக்கிய இரும்புத்தாதுக்கள் ஆகும்.
- இரும்பு ஆக்சைடுகள் கரியுடன் கலந்து உலோகம் பிரித்து எடுக்கப்படுகிறது.
- இரும்பு, வார்ப்பிரும்பு (Cast iron),, தேனிரும்பு (Wrought iron), எஃகு (Steel) என மூவகையாகப் பிரிக்கப்படுகிறது.
- தேனிரும்பு சற்று வளைந்து கொடுக்கும் தன்மை உடையது.
- ஜாம்ஷெட்பூர், துர்க்காபூர், பிலாய், ரூர்கேலா, பத்ராவதி, பொக்காரோ, சேலம் (தமிழ்நாடு) போன்ற இடங்களில் பெரிய இரும்புத் தொழிற்சாலைகள் அமைந்துள்ளன.
- இந்தியாவில் 1757.3 கோடி டன் இரும்பு இருப்பதாக கணக்கிடப்பட்டுள்ளது.
- இரும்புடன் தேவையான அளவு கரியைச் (கார்பன்) சேர்ப்பதால் எஃகு கிடைக்கும்.
- எஃகு இரும்பைவிடப் பல மடங்கு கடினமானது; உறுதியானது. எளிதில் துருப்பிடிக்காதது.