அலுமினியம்
- அலுமினியத்தை ஏழைகளின் உலோகம் என்றும் களிமண் தந்த வெள்ளி என்றும் வருணிப்பர்.
- 1825ஆம் ஆண்டு டென்மார்க் நாட்டைச் சேர்ந்த ஓர்ஸ்டடு (Oersted) என்ற விஞ்ஞானியால் தூய உலோக அலுமினியம் பிரித்தெடுக்கப்பட்டது.
- 1827ஆம் ஆண்டு ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த வோலர் (Wohler) என்ற ரசாயன அறிஞரால் சிறிய அளவில் அலுமினியம் பிரித்தெடுக்கப்பட்டது.
- 1886ஆம் ஆண்டு அமெரிக்க நாட்டின் ஹால் (Hall) மற்றும் பிரான்சு நாட்டின் ஹெரௌல்டு (Heroult) ஆகியோர் மின்னாற்பகுப்பு முறை மூலம் வர்த்தக முறையில் அலுமினிய உற்பத்திக்கு வழிகாட்டினர்.
- வெப்பம் உணர் கருவிகளுக்குத் தேவையான வெப்பக் கடத்தியாகவும் மின்சாதனங்களுக்குத் தேவையான மின்கம்பியாகவும் அலுமினியம் பயன்படுத்தப்படுகின்றது.
- ஆக்சிஜனுக்கும் சிலிகனுக்கும் அடுத்த நிலையில் அதிகமாகக் கிடைக்கும் தனிமம் அலுமினியம் ஆகும்.
- குருந்தக் கல், பதுமராகம் போன்ற மணிகள் அலுமினியம் ஆக்சைடின் வடிவங்கள்.
- தமிழ்நாட்டில் சேலம் மாவட்டத்தில் பாக்சைட் கிடைக்கிறது.
- இந்தியாவில் 1943ஆம் ஆண்டு அலுமினிய உற்பத்தி தொடங்கியது.
- ஆக்சிஜன் போன்ற தனிமங்களுடன் சேர்ந்த கூட்டுப் பொருளாகவே அலுமினியம் உள்ளது.
- அப்பிரகம், கற்பலகை, சில களிமண் வகைகள், பாக்சைட், கிரையோலைட் ஆகியன அலுமினியம் கலந்த கூட்டுப் பொருள்கள்.
- பாக்சைட்டிலிருந்து அலுமினியத்தைப் பிரித்தெடுப்பது சிக்கனமான முறையாகும்.
- அலுமினியத்தில் துரு பிடிப்பதில்லை. ஆனால், அமிலங்களில் கரைந்துவிடக் கூடியது.
- ஆகாய விமானங்கள் செய்யப் பயன்படும் டூராலுமின் என்ற உலோகம் அலுமினியம், சிறிதளவு செம்பு, மக்னீசியம், மாங்கனீஸ் கலந்த உலோகக் கலவையாகும்.
- பூமியில் தனிமங்களின் செழிப்பு என்ற வரிசையில் அலுமினியம் மூன்றாவது இடத்தில் உள்ளது.
- மண்ணிலிருந்து கிடைக்கும் நவரத்தினங்களில் மரகதம், செந்நிறக்கல், நீலக்கல் மற்றும் பசுமை கலந்த நீலக்கல் போன்றவற்றில் அலுமினியம் ஒரு சேர்மானப் பொருளாகச் சேர்ந்துள்ளது.