புதிர் விடுகதைகள்
1. பந்தயத்தில் நான் கருவி
படைவீரன் எனக்குப் பாரம்
சக்திக்கு நானே சாட்சி!
2. என்னுடலுக்கு இரு முகங்கள்
வெளிமுகம்; உள்முகம் வாயாடி
ஊமையின் உத்தரவின்றி உள்ளே வராதே!
3. உரமிருந்தும் நல்ல ஊட்டமிருந்தும் அந்த ஊளைச்சதையுடன் ஒட்டியிருப்பதால்
கடைசியில் என்னைக் கைகழுவி விடுகிறார்கள்.
4. குருதிக்கொடையாளிகளே வணக்கம்! யாரையும் அடிக்காதீர்கள் தீர்மானம் நிறைவேற்றுகிறோம்
யாவரும் கேளிர் கொள்கைபரப்புச் செயலாளர்.
5. பேதங்களை இணைக்கும் பேதையவள்
பிரிவினையை நீக்கும் பாவையவள்
எதிரும் புதிரும் நீட்டும் நேசக்கரத்தாள்.
6. வெறிச்சோடிக் கிடந்த
வீடும் விளையாட்டுத் திடலும்
களை கட்டின.
7. ஏற்றத்தாழ்வு எனக்கும் உண்டு
ஏறும்போதும் இறங்கும்போதும் நிறைமாறாதென் தேகம் தென்றலால் நனைக்கப்படுகிறது.
8. ஆருடக்காரர்களுக்கு அதிருஷ்டக் கருவி
அதிகாரம் பூசியவர்கள் அடையும் முகவரி வாரி இறைத்துவிட்ட வைரப் பூச்சிகள்.
9. பச்சைப்பாம்பின் மறுபிறப்பே! – நீ
கல்கட்டா இறக்குமதியோ கல்பாக்கா உற்பத்தியோ உன் நேர்மையில் எமக்கு நிறையவே சந்தேகம்.
10. என் வரவை வாழ்த்தி
மண்ணோர் புகழ் பாடுவர்!
வண்ணார் வசை பாடுவர்!