துத்தநாகம்(Zinc)
- நீலம் கலந்த வெள்ளை நிற வேதி உலோகமாகும்.
- ஆசியா, ஆஸ்திரேலியா மற்றும் அமெரிக்க அய்க்கிய நாடுகளில் அதிகம் கிடைக்கிறது.
- உலகம் முழுவதும் 1.9 கோடி டன்கள் அளவில் துத்தநாகம் இருப்பதாகக் கண்டறிந்துள்ளனர்.
- பூஞ்சைகளைக் கொல்லும் வல்லமை துத்தநாகத்திற்கு உள்ளது.
- துத்தநாகத் தனிமங்களுள் ஒன்றான துத்தநாக கார்பனேட் அடங்கிய காலமைனை கால்சியனேற்றம் செய்தால் துத்தநாக ஆக்சைடு கிடைக்கும்.
- துத்தநாக ஆக்சைடு, குளிர்ச்சியாக இருக்கும்போது வெண்மையாகவும், சூடாக இருக்கும்போது மஞ்சளாகவும் இருக்கும்.
- தற்போது 90 சதவிகித தூய துத்தநாக உலோக உற்பத்தி மின்னாற்பகுப்பு வழிமுறைகளினால் பெறப்படுகிறது.
- பொதுவாக துத்தநாகம் செம்பு மற்றும் ஈயத் தாதுக்களுடன் கலந்துதான் காணப்படுகிறது.
- எஃகு போல உறுதி கொண்ட பிரஸ்டல் (Prestal) என்ற கலப்பு உலோகம் 78% துத்தநாகமும் 22% அலுமினியமும் கொண்டது.
- துத்தநாகம் பூசிய இரும்பு துருப்பிடிக்காது. இதற்கு கால்வனைஸ்டு இரும்பு என்று பெயர்.
- சராசரி மனிதனின் உடலில் 1.5லிருந்து 2.5 கிராம் துத்தநாகம் காணப்படுகிறது.