பிஞ்சுகள் பக்கம்
கோடைப் பண்பலையில் ஓர் உரையாடல்
தென் மாவட்ட மக்களுக்காக கொடைக் கானலில் இருந்து ஒலிபரப்பாகும் கோடைப் பண்பலை 100.5இல் புதன்கிழமை இரவு 8 மணிக்கு பள்ளி மாணவ மாணவிகளுக்கான விடை தேடும் வினாக்கள் என்னும் நிகழ்ச்சி ஒலிபரப்பாகிறது.
நிகழ்ச்சியினைத் தொகுத்து வழங்குபவர், மறைபொருளாகக் கேட்கும் 3 கேள்விகளுக்கு சரியான விடை சொல்ல வேண்டும். 28.8.2013 அன்று இந்நிகழ்ச்சியில் பங்கேற்றார் பெண்கள் அரசு மேல்நிலைப் பள்ளியில் 9ஆம் வகுப்புப் படிக்கும் மாணவி இ.சுரபி. இதோ அந்த உரையாடல்: அறிவிப்பாளர்: வணக்கம் சுரபி, என்னிடம் ஒரு தலைவர் ஒளிந்துள்ளார்.
சுரபி: வணக்கம். அவர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவரா?
அறிவிப்பாளர்: ஆமாம்.
சுரபி: அவர் எந்த ஊரில் பிறந்தார். சுதந்திரப் போராட்டத்தில் கலந்து உள்ளாரா?
அறிவிப்பாளர்: ஊரைச் சொன்னால் விடையைச் சொல்லி விடுவீர்கள். அதனால் அவர் பிறந்த தேதியை மட்டும் கூறுகிறேன். செப்டம்பர் 17ஆம் தேதி.
சுரபி: விடையைச் சொல்கிறேன். அவர் தந்தை பெரியார் அவர்கள்.
அறிவிப்பாளர்: விடையை எப்படிச் சரியாகச் சொன்னீர்கள்.
சுரபி: எங்கள் பள்ளியில் பெரியார் அவர்களின் 135ஆவது பிறந்த நாளைக் கொண்டாடும் வகையில் 1.9.2013 அன்று பெரியார் பிஞ்சு சார்பாக வினாடி வினா நிகழ்ச்சி நடத்துகிறார்கள். அதற்குரிய புத்தகத்தை அய்ந்து நாட்களாகப் படித்து வருகிறேன். அதனால் விடையைக் கூறி விட்டேன்.
– தகவல்: ம.மு.அன்புக்கரசன்,
பெரியகுளம்
படிப்பு
படிப்பதற்கு இருக்க வேண்டியது ஆர்வம்
இருக்கக்கூடாதது கர்வம்
வானத்துக்கு எல்லை இல்லை
கடலுக்கு எல்லை இல்லை
அதுபோல, கல்விக்கு முடிவு இல்லை.
– ச.அன்னபூரணி, ஏழாம் வகுப்பு,
ஆர்.சி.நடுநிலைப் பள்ளி, மதுரை.
அப்பா: ஏண்டா, எங்கிட்ட காசு வாங்கிறய்ல… போதாதா? அம்மாகிட்ட வேற எதுக்குடா வாங்குற?… இங்க பாரு… வாழ்க்கையில சிக்கனமா இருந்து பழகணும்… பலூனை அளவுக்கு மீறி ஊதினா வெடிச்சிரும், இல்லையா?
மகன்: பலூன் வெடிச்சிட்டா, அதுக்காக அதை வீசி எறிஞ்சிற மாட்டேன்… வெடிச்ச பலூனுக்குள்ள வெரலை விட்டு ஊதிக் காத்தடைச்சா, குட்டி குட்டி பலூன் நாலஞ்சு வந்திருமே!
– தேன் தினகரன், அயப்பாக்கம்
பெரியார்
இவர் ஆடை கருப்பு
ஆனால் அவர் உள்ளம் வெண்மை
பூந்தோட்டத்தின் காவல்காரன் அவர்
அதில் பூக்கும் பூக்கள்தான் நாங்கள்
வேடந்தாங்கல் சரணாலயம் நீங்கள்
பல மைல் கடல் தாண்டி கடந்து வரும் பறவைகள் நாங்கள்
அன்போ நீங்கள்
அறமோ நாங்கள்
சொல்லச் சொல்ல இது முடியாது
கேட்கக் கேட்கக் கசக்காது
– எஸ்.சந்திரகிரிபுர சதீஷ்
//