வள்ளுவர் குரல்….
திருக்குறளில் நேரடியாகவும் குறிப்பாகவும் குறிப்பிட்டுள்ள குற்றங்கள்:
1. தாய், தந்தை, ஆசிரியரை மதிக்காமலிருத்தல்.
2. வேளாண்மைத் தொழிலை இழிவு செய்தல்.
3. கல்வியைத் தடைசெய்தல்.
4. எந்த வேலையுமின்றி சோம்பேறியாய் இருத்தல்.
5. அறிவுள்ளவர்களைப் புறக்கணித்தல்.
6. நடுநிலை தவறுதல்.
7. யார் எதைச்சொன்னாலும் என்னவென்று யோசிக்காமல் அதனைப் பின்பற்றுதல். எதற்கும் தேவையில்லாத காரணங்களைச் சொல்லுதல்.
8. முன்னோர்கள் சொன்னார்கள் என்று கூறி பொருட்களை வீணடித்தல்.
9. வறியவர்களைத் துன்புறுத்துதல்.
10. உயிர்க் கொலை செய்தல்.
11. பொய் சொல்தல்.
12. அறமான செயல்களுக்குத் தடையாக இருத்தல்.
(இங்கு பொய் சொல்வதில் தவறில்லை என்கிறார்)
13. திருடுதல்.
14. புறம் சொல்லுதல்.
15. இல்லாதவற்றை இருப்பது போல் இட்டுக்கட்டிக் காண்பித்தல்.
16. மனிதருக்குள் பேதம் பார்த்தல்.
17. உழைக்காமல் உண்ணுதல். 18. தரமற்றவை என அறிந்தும் எதிர்ப்புக் காட்டாமல் வாங்குதல்/கொடுத்தல்.
19. உடனிருப்போர் பட்டினியாய் இருக்க நாம் சாப்பிடுதல்.
20. கேள்வி கேட்காமல் இருத்தல்.
21. கடவுள் செய்வான் என மூடத்தனமாக நம்பி எதுவும் செய்யாமல் இருத்தல்.
22. அறிவுள்ளோர் நட்பைப் புறக்கணித்தல்.
23. தனது கடமையைச் செய்யாமலிருத்தல்.
24. பிறன்மனை நோக்குதல்.
25. குழந்தைகளுக்கு மூடத்தனத்தைப் புகட்டுதல்.