உலக நாடுகள் போட்ஸ்வானா(Republic of Botswana)
தலைநகர்: காபோரோன்
பரப்பளவு: 5,81,762 ச.கி.மீ.
மொழி: ஆங்கிலம், செட்ஸ்வானா
முக்கிய நகரம்: காபோரோன்
முக்கிய ஆறுகள்: மேலோபோ, லிம்போபோ, சோப், ஷஷி
நாணயம்: புலா (Pula)
குடியரசுத் தலைவர்: இயன் காம (Ian Khama)
துணைக் குடியரசுத் தலைவர்: போனட்ஷெகோ கெடிகில்வி (Ponatshego Kedikilwe)
அமைவிடம்: நான்கு பக்கமும் நிலப்பகுதியால் சூழப்பட்டு தென் ஆப்பிரிக்காவின் மத்தியில் அமைந்துள்ள நாடு ஆகும். இதன் மேற்கே நமீபியாவும், வடக்கே சாம்பியாவும், கிழக்கே ஜிம்பாப்வேயும், தெற்கே தென் ஆப்பிரிக்கக் குடியரசும் அமைந்துள்ளன.
கனிம வளம்: பெட்ரோலியம், இயற்கை வாயு, நிக்கல், வைரம், உப்பு, நிலக்கரி, டங்ஸ்டன், பொட்டாஷ்.
விவசாயம்: நாட்டின் மொத்த நிலப்பரப்பில் 5 சதவிகிதம் விவசாயத்திற்குப் பயன்படுத்தப்படுகிறது. 75 சதவிகித மக்கள் விவசாயம் செய்கின்றனர். தீவனச் சோளம், பீன்ஸ், நிலக்கடலை ஆகியன முக்கிய விளைபொருள்கள்..
தொழில்: வைரம், செம்பு, நிக்கல், உப்பு, பொட்டாஷ், நிலக்கரி, இறைச்சி பக்குவப்படுத்துதல் ஆகிய உற்பத்தித் தொழில்கள் நடைபெறுகின்றன.
சிறப்புச் செய்தி: போட்ஸ்வானாவின் பெரும்பகுதி கலாஹாரி பாலைவனத்தில் அமைந்துள்ளது. உலகின் மிகப் பெரிய வைரச் சுரங்கமான ஒராபா(Orapa) இங்கு அமைந்துள்ளது. போட்ஸ்வானாவின் பழைய பெயர் Bechuanaland என்பதாகும்.