இது பழ மின்சாரம்
அருமைப் பிஞ்சுகளே…
அறிவியல் கண்காட்சிகளைப் பார்த்திருக்கிறீர்களா? அங்கே எலுமிச்சைப் பழத்திலிருந்து மின்சாரம் எடுக்கும் ஒரு செய்முறையைக் காட்டுவார்கள்.
வினிகர் சாறு மின்சாரம்
அதாவது பல துண்டுகளாக வெட்டப்பட்ட எலுமிச்சைகளில், ஒவ்வொரு துண்டிலும் ஒரு துருப்பிடிக்காத இரும்பு ஆணியைச் சொருகி, அதில் செம்புக் கம்பியின் ஒரு முனையை இணைத்துவிடுவார்கள். இன்னொரு முனையில் சிறிய, மிகக் குறைந்த சக்தியுடைய மின் பல்பை இணைப்பார்கள்.
கேலெப் சார்லண்ட்
இப்போது எலுமிச்சையிலுள்ள சாறு மின் பகுளியாகச் செயல்பட்டு மின்சாரம் தந்து, இரும்பு ஆணியில் உள்ள துத்தநாகப்(zinc) பூச்சு electronகளை உற்பத்தி செய்து செம்புக் கம்பி வழியே சென்று மறுமுனையில் உள்ள மின் பல்பை எரியச் செய்யும். இதனை அடிப்படையாக வைத்து கேலெப் சார்லண்ட்(Caleb Charland) என்ற அறிவியலாளர், இயற்கையாக விளையக்கூடிய உணவுப் பொருட்களில் இருந்து சிறு சிறு led பல்புகளை எரிய வைத்துள்ளார்.
கிரேப் பழ மின்சாரம்
உருளைக்கிழங்கு மின்சாரம்
ஆரஞ்சுப் பழ மின்சாரம்
புளிப்புப் பழங்கள் மின்சாரம்
ஆப்பிள் மின்சாரம்
காய்கறி, பழ மின்சாரம்
இவர் ஒரு ஒளிப்படக் கலைஞருமாவார். இந்த அறிவியல் சோதனைகளைச் செய்து பார்த்த அவர் அதனை அழகாகப் படம் எடுத்துள்ளார். அந்த அழகினைப் பாருங்கள்.
– இணையத்திலிருந்து இ.பெ.தமிழீழம்