டைட்டானியம் (Ti)
- கிரேகார் (W. Gregor) என்னும் இங்கிலாந்து நாட்டு மத போதகரால் டைட்டானியம் முதலில் கண்டுபிடிக்கப்பட்டது.
- 1791இல் கண்டுபிடிக்கப்பட்ட புதிய உலோகத்திற்கு மெனாக்சின் (Menaccin) என்றும், கனிமத்திற்கு மெனாக்கோனைட் என்றும் பெயர் வைத்தார். தற்போது அந்தக் கனிமம் இல்மெனைட் என்றும் தனிமம் டைட்டானியம் என்றும் அழைக்கப்படுகிறது.
- மார்டின் கலாப்ரோத் (Klaproth) என்ற ஜெர்மன் நாட்டு வேதியியல் அறிஞர் 1975இல் ஹங்கேரி நாட்டிலிருந்து கிடைத்த ரூடைல் என்ற கனிமத்திலிருந்து பிரித்தெடுத்த தனிமத்திற்கு டைட்டானியம் என்று பெயரிட்டார்.
- தூய டைட்டானியத்தை 1895ஆம் ஆண்டு பிரான்சு நாட்டு வேதியியல் அறிஞர் ஹென்றி மோய்சன் கண்டுபிடித்தார். எனினும், 1917இல் ஹண்டர் (Hunter) என்ற அமெரிக்கரால் மேலும் தூய்மையூட்டப்பட்ட டைட்டானியம் கண்டுபிடிக்கப்பட்டது.
- டைட்டானியம் குறைவான அடர்த்தியும், மிகுந்த வலிமையும் கொண்ட பிரகாசமான வெண்ணிற உலோகமாகும்.
- பூமியில் அதிக அளவில் கிடைக்கும் தனிம வரிசையில் டைட்டானியம் 9ஆவது இடத்தைப் பெற்றுள்ளது.
- அதிக அளவில் ஆஸ்திரேலியாவிலும், அடுத்தபடியாக அமெரிக்கா, இந்தியா, பிரேசில் போன்ற நாடுகளிலும் கிடைக்கின்றது.
- நம் நாட்டில் கேரளக் கடற்கரை மணலில் இல்மனைட் என்ற கனிமமாகக் கிடைக்கிறது.
- பூமியின் நிலப்பரப்பைவிட கடலின் தரை மட்டங்களில் அதிக அளவில் கிடைக்கின்றது.
- டைட்டானியப் பூச்சு செய்யப்பட்ட தகடுகள் 10 ஆண்டுகள் கடல் நீருக்குள் இருந்தாலும் சிறிய அளவில்கூட துருப்பிடிப்பதில்லை.
- டைட்டானியம் மின்சாரத்தைக் கடத்தாததால், மின்காப்புச் சாதனங்கள் மற்றும் செராமிக் பொருள்கள் தயாரிக்கப் பயன்படுகின்றது.
- உயர் வேகத்தில் செல்லும் நவீன விமானங்களை வடிவமைக்கப் பயன்படுகிறது.
- பூமியைவிட சந்திரனில் டைட்டானியம் ஆக்சைடு அதிகம் உள்ளதாக ஆய்வுகள் தெரிவித்துள்ளன.
- டைட்டானியத்தையும் நிக்கலையும் சேர்த்து உருவாக்கப்பட்ட கலப்பு உலோகம் நிட்டினால் எனப்படுகிறது.
- நிட்டினால் அதன் பழைய உருவத் தோற்றத்தை நினைவில் வைத்துக் கொண்டு, உருமாற்றத்திற்கு உட்பட்ட பின்பு மீண்டும் பழைய தோற்றத்தை அடைவதால் நினைவு உலோகம் (Memory Metal) என்றும் அழைக்கப்படுகிறது.
- 1962ஆம் ஆண்டு வில்லியம் ஜெ. பக்லர் (Buckler) என்னும் அமெரிக்கரால் நிட்டினால் கண்டுபிடிக்கப்பட்டது.
- இடம் பெயர்ந்த மூட்டுகளைச் சரி செய்து முறையாகக் கிண்ணத்தில் பொருத்த மருத்துவத்துறையில் நிட்டினால் பயன்படுத்தப்படுகிறது.
- தோல் மற்றும் துணிகளுக்குச் சாயமிடுதலிலும் கண்ணாடி, பீங்கான் செயற்கை ரத்தினங்கள் உற்பத்தியிலும் பயன்படுகிறது.
- கல்பனா சாவ்லா பயணித்த விண்கலத்தில் டைட்டானிய தகடு பெயர்ந்து விழுந்ததன் காரணமாக விண்கலம் தீப்பிடித்துச் சிதறி கல்பனா சாவ்லா உட்பட 8 விண்வெளி வீரர்கள் உயிரிழந்தனர்.