உலக நாடுகள் பிரேசில்(Brazil)
தலைநகரம் : பிரேசிலியா
மொழி : போர்ச்சுகீஸ்
பரப்பளவு : 3,267,597 சதுர மைல்கள்
மக்கள் தொகை : 201,032,714
நாணயம் : ரியல்
உலகின் பெரிய இயேசு சிலை
பெரிய நகரம் : சாவோபவ்லோ
குடியரசுத் தலைவர்: டில்மா ரூசுஃப் (Dilma Rousseff)
துணைக் குடியரசுத் தலைவர்: மிக்கேல் டீமெர்(Michel Temer)
அமைவிடம்: தென் அமெரிக்காவின் மிகப் பெரிய நாடு. தென் அமெரிக்காக் கண்டத்தின் மொத்த நிலப்பரப்பில் 45 சதவிகித நிலப்பரப்பைக் கொண்டுள்ளது. வடக்கில் ஃபிரெஞ்சு கயானா, கயானா சுரினாம், வடமேற்கில் வெனிசுலா, கொலம்பியா, மேற்கில் பெரு, பொலிவியா, தென்மேற்கே பராகுவே, அர்ஜென்டினா, தெற்கில் உருகுவே, வடக்கு மற்றும் கிழக்கில் அட்லாண்டிக் கடல் அமைந்துள்ளன.
இயற்கையமைப்பு: இயற்கையமைப்பை ஒட்டி, வடக்கே அமேசான் வடிநிலம், மத்தியத் தாழ்நிலம், கிழக்கில் பிரேசில் மேட்டு நிலம் என மூன்று வகையாகப் பிரிக்கப்பட்டுள்ளது.
விவசாயம்: மொத்த நிலப்பரப்பில் 17 சதவிகிதம் விவசாயத்திற்குப் பயன்படுத்தப்படுகிறது. நெல், கரும்பு, கோகோ, வாழை, காப்பி, சோயா பீன்ஸ், பருத்தி ஆகியன முக்கிய விளைபொருள்கள் ஆகும்.
காபி தோட்டம்
சிறப்புச் செய்தி: காப்பி உற்பத்தியில் முதலிடத்தில் உள்ளது. கால் பந்தாட்டத்திற்குப் புகழ்பெற்ற நாடு ஆகும். 5 முறை உலகக் கோப்பையை வென்றுள்ளது. மக்கள் தொகை மற்றும் பரப்பளவில் உலகிலேயே அய்ந்தாவது பெரிய நாடு. எக்குவடோர், சீலே தவிர அனைத்துத் தென் அமெரிக்க நாடுகளுடனும் எல்லையைப் பகிர்ந்து கொண்டுள்ளது.
7,491 கி.மீ. நீளமான கடற்கரையைக் கொண்டுள்ளது. புகழ்பெற்ற அமேசான் நதி இங்கு ஓடுகிறது. மிகச் சிறந்த தரம் வாய்ந்த கிரிஸ்டல் படிவத்தை வணிக நோக்கில் தயாரிக்கிறது.