காலையும் உலக மக்களும்
சீனர்கள் அதிகாலையில் முந்தையநாள் செய்தவற்றையும், அன்றைய தினம் செய்யப்போவதையும் எழுதுவார்கள். காகிதம் கண்டுபிடிக்கத் தூண்டுகோலாக இருந்ததே இந்தப் பழக்கம்தான்.
ஆப்பிரிக்கர்கள் அதிகாலையில் வேட்டையாடும் பழக்கம் உள்ளவர்கள். காலையில் வேட்டையாடி உணவு சேகரித்தபிறகு பகலில் இருப்பிடம் அமைத்தல், தங்குமிடப் பாதுகாப்பு போன்றவற்றிற்கு நேரம் ஒதுக்குவார்கள். சோம்பலற்ற இந்தச் சுறுசுறுப்பு சுமார் 300 ஆண்டுகள் அடிமை வாழ்வைத் தந்தாலும் இன்று அமெரிக்கா, மற்றும் பல அய்ரோப்பிய நாடுகளின் நாகரிக வளர்ச்சிக்கு தாங்களும் ஒரு பங்காக அமைந்தனர்.
அய்ரோப்பியர்கள் காலையில் படிக்கும் எழுதும் பழக்கம் உள்ளவர்கள். ஆகையால்தான் அவர்களால் பல புதிய கண்டுபிடிப்புகளை உலகிற்குத் தர முடிந்தது.
அரேபியர்கள் அதிகாலையில் வியாபாரம் தொடர்பான பணிகளைக் கண்டிப்பாகச் செய்வார்கள், பகல் நேரங்களில் வெப்பத்தின் தாக்கம் அதிகம் இருப்பதால் வியாபார சிந்தனைகளில் மனதினை ஒருமுகப்படுத்த முடியாமல் போய்விடுகின்ற காரணத்தால் அதிகாலையிலேயே தங்களின் பணிகளைத் தொடங்கிவிடுவார்கள்.
பஞ்சாபியர்கள் காலையில் வயலில் மற்றும் அன்றைய காலநிலைகளைக் கணிப்பதில் அக்கறை கொள்வார்கள். அவர்களுக்கு விவசாயம் முக்கியத் தொழிலாகும் இந்தப் பழக்கம்தான் இந்தியா, பங்களாதேஷ், பாகிஸ்தான் மற்றும் சார்க் நாடுகளுக்கு கோதுமைக் கிடங்காக மாற காரணமாகிவிட்டது.
துருவப் பகுதியில் வாழும் மக்கள் அதிகாலையில் சமையல் வேலைகளைச் செய்வார்கள். கடுங்குளிரான அந்நேரத்தில் அறை முழுவதையும் வெதுவதுப்பாக வைப்பதற்காக காலையிலேயே சமையல் செய்ய ஆரம்பிக்கும் பொழுது, பகல் முழுவதும் வெப்பத்தைத் தங்களின் அறைகளுக்குள் பரப்புவதற்காக இத்தகைய செயலைச் செய்கின்றனர்.
ரஷ்யர்கள் அதிகாலையில் ஒன்று கூடி விழா போன்ற இதர செயல்களைச் செய்வார்கள். இந்தப் பழக்கம்தான் இட்லரின் படைகளை அதிகாலையில் லெனின் கிரேட் நகரில் இருந்து விரட்டியடித்து தோல்வி காண வைக்கக் காரணமானது. அதிகாலையில் சில ஆயிரம் ரஷ்யப் படைவீரர்களுடன் சேர்ந்து லெனின் கிரேட் நகர மக்கள் இதில் நூற்றுக்கணக்கான பெண்களும் சேர்ந்து சுமார் பதிமூன்றாயிரத்திற்கும் மேற்பட்ட ஜெர்மானியப் படையினரை விரட்டினார்கள்.
ஜப்பானியர்கள் அதிகாலையில் எழுந்தவுடன் வீட்டில் உள்ள மற்றும் ஆதரவற்ற முதியவர்களுக்கு முதலில் சேவை செய்துவிட்டு, பிறகு அன்றாடப் பணிகளைத் தொடங்குவார்கள்.