உலகப் பெரும் நூலகங்கள்
பிப்லியோடெகா நசியோநல் டி எஸ்பனா (Biblioteca Nacional de Espana)
ஆங்கிலத்தில் நேஷனல் லைப்ரரி ஆஃப் ஸ்பெயின் என்றழைக்கப்படுகிறது. ஸ்பெயின் நாட்டின் மட்ரிட் (Madrid) என்னுமிடத்தில் 1712ஆம் ஆண்டு தோற்றுவிக்கப்பட்டது.
இந்த நூலகத்தில் புத்தகங்கள், கையெழுத்துப் பிரதிகள், செய்தித்தாள் வரிசை, உலக வரைபடங்கள், மின்னனு ஆவணங்கள், ஒலிப் பதிவுகள் என சுமார் இரண்டரை கோடி எண்ணிக்கையில் தொகுப்புகள் இடம் பெற்றுள்ளன.
இணையதள முகவரி: www.bne.es
ஜெர்மன் நேஷனல் நூலகம் (German National Library)
ஜெர்மனி நாட்டின் தேசிய நூலகமாக 1912ஆம் ஆண்டு பிராங்க்ஃபுர்ட் ஆம் மெயின் (Frankfurt am main) என்னுமிடத்தில் நிறுவப்பட்டது. 1916ஆம் ஆண்டு அக்டோபர் 19 அன்று லெய்ப்சிக் (Leipzig) நகரில் ஜெர்மன் நேஷனல் நூலகத்தின் சிறப்புக் கட்டிடத்தில் (Main Building) திறக்கப்பட்டது.
சுமார் 2 கோடியே 47 லட்சம் (ஜெர்மன் மொழி வெளியீடுகள், மொழிபெயர்ப்புகள், வெளிநாட்டுப் பதிப்புகள்…) தொகுப்புகளைக் கொண்ட லெய்ப்சிக் நூலகத்தில் சுமார் 1 கோடியே 67 லட்சம் தொகுப்புகளும், ஃப்ராங்க்ஃபுர்ட்டில் 1 கோடியே 3 லட்சம் வகைத் தொகுப்புகளும், 7,19,000 இணையப் பதிப்புகளும் இடம் பெற்றுள்ளன.
இணையதள முகவரி: www.d-nb.de
பெர்லின் ஸ்டேட் நூலகம் (Berlin State Library)
ஜெர்மனி நாட்டின் பெர்லின் நகரில் 1661ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. உலக நூலகமாகத் திகழ்கிறது. அய்ரோப்பாக் கண்டத்திலேயே மிகப் பெரியதும் ஜெர்மன் மொழியின் முக்கியமான ஆராய்ச்சி நூலகமாகவும் உலக அளவில் சிறப்புப் பெற்றுள்ளது.
1 கோடியே 10 லட்சம் புத்தகங்கள், 2 லட்சம் அரிதான புத்தகங்கள் என சுமார் 2 கோடியே 34 லட்சம் தொகுப்புகளைத் தன்னகத்தே கொண்டுள்ளது.
இணையதள முகவரி: www.staatsbibliothekberlin.de
போஸ்டன் பப்ளிக் நூலகம் (Boston Public Library)
1848ஆம் ஆண்டு அமெரிக்க அய்க்கிய நாடுகளின் போஸ்டன் நகரில் நகராட்சியின் பொது நூலக முறையில் பொதுமக்கள் ஆதரவுடன் தொடங்கப்பட்ட இரண்டாவது நூலகமாகும்.
இலவச கம்பியில்லா இணைய இணைப்பின் மூலம் 25 கிளைகளுடன் செயல்பட்டு வருவது இதன் சிறப்பாகும். மடிக்கணினியிலும் நூலக அடையாள அட்டை ஏற்றுக் கொள்ளும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.
இணையதள முகவரி: www.bpl.org