புருண்டி (Republic of Burundi)
தலைநகரம்: புஜும்புரா (Bujumbura)
பரப்பளவு: 27,834 சதுர மைல்கள்
அலுவலக மொழி: கிருண்டி, பிரெஞ்சு
மக்கள் தொகை: 10,557,259
நாணயம்: புருண்டியன் ஃப்ராங்க்
குடியரசுத் தலைவர்: பியரி நிகுருன்ஸிஸா (Pierre Nkurunziza)
முக்கிய ஆறுகள்: மாலகார்ஜி, ருஜுஜி, அகன்யாரு, ரூவிவு, ககேரா
அமைவிடம்: கிழக்கு மத்திய ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள நாடு ஆகும். மேற்கே சயரும் வடக்கே ருவாண்டாவும் தெற்கு மற்றும் தென்கிழக்கே தான்சானியாவும் அமைந்துள்ளன.
காலநிலை: மத்திய பீடபூமிப் பகுதியில் குளிர்ந்த காலநிலையும் ஏரிப் பகுதிகளில் மிதமான காலநிலையும் நிலவுகிறது. வடமேற்குப் பகுதியில் மழைப்பொழிவு அதிகம் உள்ளது.
தொழில்: விவசாயம் சார்ந்த உற்பத்தித் தொழில்கள் நடைபெறுகின்றன.
ஏற்றுமதி: காப்பி, தேயிலை, பருத்தி.
இறக்குமதி: ஆடைகள், உணவுப் பொருள்கள், போக்குவரத்துச் சாதனங்கள், பெட்ரோலியப் பொருள்கள்.
கனிமவளம்: தங்கம், நிக்கல், தாமிரம், பிளாட்டினம்
சிறப்புச் செய்தி: ஆப்பிரிக்கப் பழங்குடியினரான பாண்டு இன மக்கள் வாழ்ந்த இந்நாட்டை 1899இல் ஜெர்மனி மேற்கு ஆப்பிரிக்காவுடன் இணைத்தது. 1916இல் பெல்ஜியத்தின் மேலாதிக்கத்தின் கீழ்வந்து 1962இல் சுதந்திரம் பெற்றது. ஆப்பிரிக்காவின் மிகச் சிறிய, அதே வேளையில் மக்கள் நெருக்கம் மிகுந்த நாடுகளில் ஒன்று. 1972, 73 மற்றும் 80களில் நடைபெற்ற ஹட்டு கலவரத்தில் ஆயிரக்கணக்கானோர் இறந்துள்ளனர். 1993இல் முதல் பொதுத்தேர்தல் நடைபெற்றது.