குண்டு எறிதல்(Shop Put)
கிரேக்க நாட்டைச் சேர்ந்த ராணுவ வீரர்கள் ட்ராய் (Troy) போரின்போது பாறைக் கற்களை வீசி எறிந்து அவர்களுக்குள் போட்டி நடத்தியுள்ளனர். இந்த விளையாட்டு விளையாடியதற்கான ஆதாரங்கள் முதல் நூற்றாண்டில் ஸ்காட்டிஷ் ஹைலேண்ட்சில் கிடைத்துள்ளது. 16ஆம் நூற்றாண்டில் 7ஆம் ஹென்றி அவையில் கனமான பொருளைத் தூக்கி எறியும் போட்டியினை நடத்தியுள்ளார்.
19ஆம் நூற்றாண்டில் ஸ்காட்லாந்து நாட்டில் குண்டு எறிதல் போட்டி நடைபெற்றதற்கான முதல் ஆதாரம் உள்ளது. 1866ஆம் ஆண்டு நடைபெற்ற பிரிட்டிஷ் அமெச்சூர் சாம்பியன்ஷிப் போட்டியில் குண்டு எறிதல் போட்டியும் நடைபெற்றுள்ளது.
1896ஆம் ஆண்டு நடைபெற்ற கோடைகால ஒலிம்பிக் போட்டியில் குண்டு எறிதல் சேர்க்கப்பட்டு, அதே ஆண்டில் உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியிலும் இணைக்கப்பட்டுள்ளது. குண்டு எறிபவர் 7 அடி வட்டத்திற்குள் நின்று எறிய வேண்டும். குறிப்பிட்ட வட்ட எல்லையைத் தாண்டக் கூடாது. விளையாடும் போது கையுறைகள் (Gloves) அணியக்கூடாது.
கழுத்தடிக்கு அருகில் குண்டினை வைத்து கையைத் தோளுக்கு மேல் உயர்த்தி ஒரே கையினைப் பயன்படுத்தி வீசி எறிய வேண்டும். குண்டு எறிதல் விளையாட்டில் டிஸ்கோபெட் முறை, ஓபிரியன் முறை என்ற வகைகள் உள்ளன. பிடித்தல், நிற்கும் நிலை, சறுக்குதல் மற்றும் எறிதல் போன்றன முக்கியத் திறன்களாக கருதப்படுகின்றன.
விளையாடுபவரின் வயதிற்கேற்ப குண்டின் எடையானது பயன்படுத்தப்படுகிறது. பொதுவாக ஆண்களுக்கு 7.26 கிலோ கிராம் எடையுள்ள குண்டும், பெண்களுக்கு 4 கிலோ கிராம் எடையுடைய குண்டும் போட்டிகளில் பயன்படுத்தப்படுகிறது.