வானத்துல குளிக்கலாமா?
குளிப்பது என்றால் ஏறக்குறைய எல்லாருக் குமே ஆனந்தமாகத்தான் இருக்கும். பக்கெட் தண்ணீர் குளியலுக்கு, ஷவர் குளியல் ஆனந்தம். ஷவரைவிட அருவிக் குளியல் ஆனந்தமோ ஆனந்தம்.
இன்னமும், ஏரி, குளம், வாய்க்கால், கிணறு என்று அவரவருக்கும் ஏற்ற வகையில் வாய்ப்புள்ள இடங்களில் குளித்து மகிழ்வர். உடம்புக்குப் பிரச்சினையில்லை என்றால், வெட்டவெளி மொத்தத்தையும் மாபெரும் ஷவராக மாற்றும் இயற்கையின் செல்லக் குழந்தையான மழையில் நனைவதென்றால்… அடடா… அந்தக் குளியலுக்கு ஈடு இணை ஏது?
ஓவரா… ஃபீல் பண்ணாதீங்க. இதெல்லாம் பூமியில்தான். இதே குளியல், வானத்தில் கிரகங் களை நோக்கி லட்சக்கணக்கான கிலோ மீட்டர் பயணம் செய்யும் விண்வெளி வீரர்களுக்குப் பொருந்துமா? என்று ஒரு பெரியார் பிஞ்சு கேட்கிறார். ம்… என்ன சொல்வது?
ஆங்… வானத்தில் போனாலும் அவங்களால குளிக்க முடியும். அதுவும் பூமியில் உள்ளது போலவே. அதெப்படி? அதாவது உங்களுக்கு எப்பவாவது காய்ச்சல் வந்து, குளிக்க முடியாம இரண்டு மூணு நாளு இருந்தீங்கன்னா, உங்க அம்மா என்ன பண்ணுவாங்க? ஸ்பான்ச் வைத்து தண்ணீரைத் தொட்டு உடம்பைத் துடைத்து விடுகிறார்தானே?
அதேபோலத்தான் பக்கெட் தண்ணீர், ஷவர், அருவி, மழை இவை எதுவும் இல்லாத விண்வெளியில் விண்வெளி வீரர்கள் குளிக்கின்றனர்.