கயிற்றில் தொங்கினும் கற்கை நன்றே!
பிஞ்சுகளே, நீங்கள் பள்ளிக்கு எதில் செல்வீர்கள் என்று கேட்டால், உடனே உங்களிடமிருந்து பேருந்து, ஆட்டோ ரிக்ஷா, மகிழுந்து, மிதிவண்டி, அப்பா அல்லது அம்மாவுடன், நடந்து… என பலவிதமான பதில்கள் வரும்.
நடந்து மற்றும் பேருந்தில் கூட்டத்தில் இடிபாடுகளுக்கிடையில் செல்பவர்கள் பிற வாகனங்களில் செல்பவர்களை ஏக்கத்துடன் பார்ப்பீர்கள்தானே.
இங்கே உங்களைப் போன்ற பிஞ்சுகள் எத்தகைய இடர்ப்பாடுகளைத் தாண்டி பள்ளிக்குச் சென்று வருகின்றனர் என்பதைப் பாருங்கள்.
அன்று நம் பெரியார் தாத்தாவும் காமராஜர் தாத்தாவும் இல்லையென்றால் நம் நிலையும் இதுதானே?
மலைப் பகுதிகளில் வசிக்கும் குழந்தைகள் உயிரைப் பணயம் வைத்து பள்ளிக்குச் சென்று கல்வியைப் பெறுகின்றனர் என்றால், நீங்கள் எளிதில் பள்ளி சென்று படிக்கும் வாய்ப்பைப் பெற்றுள்ளீர்கள் என்பதை நினைத்துப் பூரித்து கல்வியில் கவனம் செலுத்தணும் அல்லவா?